Tag Archives: ஸ்ரீ.பக்தவத்சலம்

6.1 பயணீயம் (கவிதை)

-ஸ்ரீ.பக்தவத்சலம்   பயணிகளின் கனிவான கவனத்திற்கு… தயாராக இருக்கவும். தலையில் பறவையிடும் எச்சமாய், கிளையில் வந்தமரும் பறவையாய், கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய், வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய், உங்களுக்கான தடத்தில் உங்களுக்கான வண்டி எப்போதும் வரலாம். Advertisements

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

5.2 தூரிகைப் பிழை

-ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) மனத்தூரிகை முதலில் மீனை வரைந்து விட்டது. நதியின்றி நானா என்றது மீன். நதியைத் தொடங்கினால் கரையின்றியா என்றது. கரைக்குக் கோடிழுக்கையில் மண் இல்லாமலா என்றது. புல் முளைத்த மண் ஆக்கினால் மழை பெய்யாமலா என்றது. மழையைப் பொழியவிட்டால் குடை விரிந்து தொலைக்கிறது. பாவம் மீன்- நதியின்றி நீந்துகிறது.

Posted in ஐப்பசி-2017 | Tagged , , | Leave a comment

4.14 பிச்சைப்பிழைப்பு

-ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி)   இப்பிறப்பு யார், யாரோ கலந்ததால் இவ்வறிவு யார், யாரோ கற்பித்ததால் இம்மொழி யார், யாரோ செப்பியதால் இக்கவிதை யார், யாரோவின் வார்த்தைகளால் இவ்வோவியம் யார், யாரோவின் வண்ணங்களால் இம்மதம் யார், யாரோ போதித்ததால் இக்கடவுள் யார், யாரோ வணங்கியதால் இச்சண்டை யார், யாரோ சினந்ததால் இக்கருணை யார், யாரோ நெகிழ்ந்ததால் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , , | Leave a comment

3.14 ஆதிவினா

–ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) . கோடைக்காலக் குளிராடைக்கடை போல யாருமற்ற கிராமக் கோவில். திருமண் தீட்டியும் திருத்துழாய்ச் சாற்றியும் திருவடி காட்டியும் வா வா என்றார் பெருமாள். பிராட்டிக்கு பயந்தென்னவோ சில பெண் வண்டுகள் சங்கபாணியின் இதழ் நீங்கி அவனின் திருவாய் ஊதிய சங்கின் வாயில் குடித்திருந்தன. பெருமாள் பட்டர் நான். அவசர அவசரமாய் ஆராதனை … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , , | Leave a comment

3.18 நூல் அறிமுகம்: அழகிய மரம்

-ஸ்ரீ.பக்தவத்சலம் அழகிய மரம் அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி தரம்பால் (தமிழில் பி.ஆர். மகாதேவன்) தமிழினி வெளியீடு , 25-பி, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்ஸர் பிளாசா,  769, அண்ணா சாலை, சென்னை- 2 தொலைபேசி: 044- 2849 0027  அலைபேசி: 93442  90920 விலை: ரூ. 450 சாதிகள் ஒழிய … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

2.15 கடவுளும் நானும்

–ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) துயிலெழுந்தார்; உயிரெடுத்தேன். நீராடினார் ; மழையாடினேன். பசியடைந்தார்; பசியாறினேன்.

Posted in தை-2017 | Tagged , , | Leave a comment

1.17. குறும்புப் பிள்ளை

-ஸ்ரீ.பக்தவத்சலம்   குறும்பும் செல்லமுமாய் இருக்கிறது ஒரு பிள்ளை. . அடித்துக் கதவை சாத்த்விட்டு ஆங்காங்கே குப்பை கொட்டுவான். என்னடா வேலையிது வென்றால் பட்டம் பறக்க விட்டுக் காட்டுவான். . கொத்துக் கொத்தாய்ப் பூக்களை பிய்த்துப் பிய்த்துப் போடுவான். ஏனடா இப்படியென்றால் மூக்கருகே முகர்ந்துபார் நல்வாசமி தென்பான். . விளக்கேற்றிக் கரம் குவிக்கையில் விளக்கணைத்து விளையாடுவான். சாமி … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged , | Leave a comment