Tag Archives: மகாகவி பாரதி

5.14 தமிழருக்கு

–சி.சுப்பிரமணிய பாரதி தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட கவிகள்,அற்புதமான சங்கீத வித்வான்கள்,  கைதேர்ந்த சிற்பர்,  பல நூல் வல்லார்,  பல தொழில் வல்லார்,  பல மணிகள்  தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர்.  உனது  ஜாதியிலே தேவர்கள் மனிதராக  அவதரித்திருக்கிறார்கள். கண்ணை  நன்றாகத்  துடைத்துவிட்டு  நான்கு பக்கங்களிலும் பார்.  ஒரு நிலைக் கண்ணாடியிலே  போய்ப் பார். நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்திக் கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள்.  ஒளி,  சக்தி, வலிமை,  வீர்யம்,  கவிதை,  அழகு,  மகிழ்ச்சி நலங்களெல்லாம்  உன்னைச்  சார்கின்றன. தமிழா, பயப்படாதே. ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்  கொடுக்க  ஏற்பாடு … Continue reading

Posted in ஐப்பசி-2017 | Tagged | Leave a comment

2.23 நிவேதிதா தேவி

-மகாகவி பாரதி அருளுக்கு நிவேதனமாய்  அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும் பொருளாய்ப் புன்மைதாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.   குறிப்பு: மகாகவி பாரதியார் தனது ஆத்ம குருவான சகோதரி நிவேதிதை (1867, அக். 28 … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

1.13. மகாத்மா காந்தி பஞ்சகம்

-மகாகவி பாரதி   வாழ்க நீ! எம்மான், இந்த   வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி   விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர்   பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி   மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! .

Posted in ஐப்பசி-2016 | Tagged , | Leave a comment