Tag Archives: கவிதை

5.2 தூரிகைப் பிழை

-ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) மனத்தூரிகை முதலில் மீனை வரைந்து விட்டது. நதியின்றி நானா என்றது மீன். நதியைத் தொடங்கினால் கரையின்றியா என்றது. கரைக்குக் கோடிழுக்கையில் மண் இல்லாமலா என்றது. புல் முளைத்த மண் ஆக்கினால் மழை பெய்யாமலா என்றது. மழையைப் பொழியவிட்டால் குடை விரிந்து தொலைக்கிறது. பாவம் மீன்- நதியின்றி நீந்துகிறது. Advertisements

Posted in ஐப்பசி-2017 | Tagged , , | Leave a comment

4.2 குரு பார்வை

-சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர், தனது பிரதம சிஷ்யையான சகோதரி நிவேதிதைக்கு பிரிட்டானியாவில் அளித்த ஆசி மடல் இது. இந்த ஆண்டு சகோதரி நிவேதிதையின் 150-வது ஜெயந்தி ஆண்டு. BLESSINGS TO NIVEDITA The mother’s heart, the hero’s will, The sweetness of the southern breeze, The sacred charm and … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.5 விழித்தெழுக என் தேசம்!

-ரவீந்திரநாத் தாகூர் (தமிழில்: சி.ஜெயபாரதன்,  கனடா) (தாகூர் நினைவு நாள்: 1941, ஆக. 7)   இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விடவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , , | Leave a comment

4.10 வாழ்க திலகர் நாமம்!

-கவிஞர் குழலேந்தி . பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்! கங்கா தரனென கயவரும் கலங்குவர்! திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்! அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்! . கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது; அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்! என்பது இவரது தத்துவ தரிசனம்! அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.14 பிச்சைப்பிழைப்பு

-ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி)   இப்பிறப்பு யார், யாரோ கலந்ததால் இவ்வறிவு யார், யாரோ கற்பித்ததால் இம்மொழி யார், யாரோ செப்பியதால் இக்கவிதை யார், யாரோவின் வார்த்தைகளால் இவ்வோவியம் யார், யாரோவின் வண்ணங்களால் இம்மதம் யார், யாரோ போதித்ததால் இக்கடவுள் யார், யாரோ வணங்கியதால் இச்சண்டை யார், யாரோ சினந்ததால் இக்கருணை யார், யாரோ நெகிழ்ந்ததால் … Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , , | Leave a comment

4.16 கேளாச் செவிகளும் குருட்டு நடிகர்களும்…

-சந்திர.பிரவீண்குமார்   . அவர்களிடம் ஓலமிடாதீர்கள். காதுகள் சில வேளை, செவிடாகி விட்டிருக்கக் கூடும். . நடுநிலையை எதிர்பார்க்காதீர்கள். தராசின் ஒரு பாகம் நசுங்கிப் போயிருக்கக் கூடும். . அவர்கள் முன்னே அழாதீர்கள். கண்கள் குருடானது போல நடிக்கவும் கூடும்.

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

3.2 இறைவனை வழிபடு

  –கவிஞர் குழலேந்தி   இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு அறிவிலியே! மறைபல மனனம் செய்வதனாலுன் மாரகம் தவிர்ந்து போய்விடுமா? பொருள் மிக விரும்பும் மூடா, மூடா! பொதியெனும் ஆசை அகற்றிவிடு! தருமமுரைக்கும் கடமையினைச் செய் தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக! மங்கையர் தனமும் நாபியும் கண்டு மதியினை இழந்து பதறாதே! அங்கம் முழுதும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

3.8 விவேகானந்த பஞ்சகம்

–சுவாமி விபுலானந்தர்    வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ அருமுனிவ  ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்? 1 . அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ? ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ? முடிந்தமுடி பாகியவே தாந்தத்தின் பொருளை மொழிந்தவித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கோ? 2

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

3.14 ஆதிவினா

–ஸ்ரீ.பக்தவத்சலம் (ஆங்கிலத்தில்: ஜான்சி) . கோடைக்காலக் குளிராடைக்கடை போல யாருமற்ற கிராமக் கோவில். திருமண் தீட்டியும் திருத்துழாய்ச் சாற்றியும் திருவடி காட்டியும் வா வா என்றார் பெருமாள். பிராட்டிக்கு பயந்தென்னவோ சில பெண் வண்டுகள் சங்கபாணியின் இதழ் நீங்கி அவனின் திருவாய் ஊதிய சங்கின் வாயில் குடித்திருந்தன. பெருமாள் பட்டர் நான். அவசர அவசரமாய் ஆராதனை … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , , | Leave a comment

2.2 பொங்கலோ பொங்கல்!

-பொன்.பாண்டியன் கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளைத் தொழுதிடவே வண்ணப் பொடிகளிலே வாசலிலே கோலமிட்டு கன்னலை, கதலியை, கவினுறும் மாவிலையை தென்னை இளங்கீற்றை, திரளான கமுகுதனை, மங்கல மஞ்சளையும் மணித் தோரணமாய்க் கட்டி, குங்குமப் பொட்டிட்டு குலவிளக்கும் ஏற்றி வைத்து, பிழம்பொளிரும் அடுப்பினிலே புத்தரிசி தன்னுடனே அழகுபுனை பானையிலே நல்லாவின் பால் கலந்து, புத்துருக்கி நெய்யினிலே உலர்திராட்சை வாதுமையும் … Continue reading

Posted in தை-2017 | Tagged , | Leave a comment