Tag Archives: கவிஞர் குழலேந்தி

4.10 வாழ்க திலகர் நாமம்!

-கவிஞர் குழலேந்தி . பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்! கங்கா தரனென கயவரும் கலங்குவர்! திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்! அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்! . கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது; அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்! என்பது இவரது தத்துவ தரிசனம்! அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்! Advertisements

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

3.2 இறைவனை வழிபடு

  –கவிஞர் குழலேந்தி   இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு அறிவிலியே! மறைபல மனனம் செய்வதனாலுன் மாரகம் தவிர்ந்து போய்விடுமா? பொருள் மிக விரும்பும் மூடா, மூடா! பொதியெனும் ஆசை அகற்றிவிடு! தருமமுரைக்கும் கடமையினைச் செய் தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக! மங்கையர் தனமும் நாபியும் கண்டு மதியினை இழந்து பதறாதே! அங்கம் முழுதும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

2.25 தமிழ்த்தாத்தா பஞ்சகம்

-கவிஞர் குழலேந்தி தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம் எங்கள் தமிழ்த்தாத்தா தான். 1 ஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு பாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை பாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட தூதர் தமிழ்த்தாத்தா தான். 2

Posted in தை-2017 | Tagged , | Leave a comment

1.3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’

-கவிஞர் குழலேந்தி தேசியம் மலர்ந்து மணம் பரப்பிய கர்ம பூமி; பாரதத்திற்கே வழிகாட்டிய தெய்வீக புருஷர்கள் பலர் அவதரித்த தர்ம பூமி; பல்லாயிரம் வருடங்களாகத் தொடர்ந்து உலகில் சிறந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிளிரும் தவ பூமி; அற்புதமான இலக்கியச் செறிவுக்கும் ஞானத்திற்கும் நெடிய பாரம்பரியத்துக்கும் அடையாளமான அழியாப்புகழ் கொண்ட நூல்களை அளித்த பெருமக்களின் புண்ணிய பூமி, … Continue reading

Posted in ஐப்பசி-2016 | Tagged | Leave a comment

1.25. நமக்கெலாம் காப்பு!

-கவிஞர் குழலேந்தி (ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17) * திருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங்கர்ய வல்லுநன். திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய திண்மை மிக்க மன்னவன். 1 . சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன். தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து சாதனை செய்த புரட்சியாளன். திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த தெய்வம் அருளிய தமிழ் முனி. வடமொழியில் கரைகண்ட வேதவித்து. ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2  .

Posted in ஐப்பசி-2016 | Tagged , | Leave a comment