4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்!

-கலாவதி

தவறு செய்யும் ஆட்சியாளர்களைக் குறிப்பதற்காக,  ‘ரோம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்’  என்ற வாக்கியத்தைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்தியாவில் மட்டும் அந்த வாக்கியம் இன்றைய எதிர்க்கட்சிகளுக்கே பொருந்துகிறது.

எந்த ஒரு திட்டத்தையும், சட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்னரே அதைப் பற்றிய அவதூறுகளையும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி விடுகின்றன. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து மக்களுக்குப் பணியாற்றுவதற்குப் பதிலாக, கடும் வெறுப்புப் பிரசாரத்தை அவை முன்வைக்கின்றன. அவர்களுக்குச் சாதகமாக சில ஊடகங்களும் சாமரம் வீசுகின்றன. Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்

-திருநின்றவூர் ரவிக்குமார்

பாளாசாகேப் தேவரஸ்

பாளாசாகேப் தேவரஸ்

(பிறப்பு: 1915, டிச. 11- மறைவு: 1996 ஜூலை 17)

உலகின் மிகப் பெரிய தன்னார்வலர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அதன் மூன்றாவது தலைவராக இருந்தவர் பாளாசாகேப் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மதுகர் தத்தாத்ரேய தேவரஸ். ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஈர்க்கப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தவர் பாளாசாகேப் தேவரஸ்; அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்.

1943-இல் புனேவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முகாமில் அப்போதைய தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர், ஊழியர்களிடையே பாளாசாகேப் தேவரஸை சுட்டிக்காட்டி, ‘’உங்களில் பலர் பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸைப் பார்த்துக் கொள்ளுங்கள். இவரிடம் நீங்கள் டாக்டர்ஜியைக் காணலாம். இவர் டாக்டர்ஜியின் மறுவடிவம்’’ என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸினால் முழுமையாக வடிவமைக்கப்பட்டது தேவரஸின் ஆளுமை. அதேபோல ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்தை மாற்றி அமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ். ஆர்.எஸ்.எஸ். என்றால் சீருடை அணிந்து ‘லெஃப்ட், ரைட்’ என்று சீராக அணிவகுத்துச் செல்பவர்கள் மட்டுமே என்ற எண்ணத்தை மாற்றி,  ஆர்.எஸ்.எஸ். என்றால் தன்னலமற்ற சேவைக்குத் தயாரானவர்கள். Ready for Selfless Service என்று சர்வோதயத் தலைவரான திரு. பிரபாகர் ராவ் பாராட்டும் படியாக ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றத்தை,  வெளிப்பாட்டை மாற்றியமைத்தவர் பாளாசாகேப் தேவரஸ். Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.10 வாழ்க திலகர் நாமம்!

-கவிஞர் குழலேந்தி

லோகமான்ய பாலகங்காதர திலகர்

.

பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!

கங்கா தரனென கயவரும் கலங்குவர்!

திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!

அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!

.

கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;

அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!

என்பது இவரது தத்துவ தரிசனம்!

அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்! Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.11 புனித நினைவுகள்: ஆடி, ஆவணி, புரட்டாசி

-ஆசிரியர் குழு

 

ஆன்றோர் நாட்கள் (தமிழ் மாதப்படி):

ஹேவிளம்பி வருடம்- ஆடித் திங்கள்

(17.07.2017- 16.08.2017)

03 (19/07/2017)- கிருத்திகை: மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ  நாயனார்

05 (21/07/2017)- திருவாதிரை: கூற்றுவ நாயனார்

10 (26/07/2017)- பூரம்:  ஆண்டாள்

13 (29/07/2017)- சித்திரை: பெருமிழலைக்குறும்ப நாயனார்

14 (30/07/2017)- ஸ்வாதி: சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார்

18 (03/08/2017)- கேட்டை: கலிய நாயனார், கோட்புலி நாயனார்

21 (06/08/2017)- உத்திராடம்: பட்டினத்தார், ஆளவந்தார்.

.

Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.13 ஆண்டாள், தமிழை ஆண்டாள்

கவியரசு கண்ணதாசன்

ஆண்டாள்
(திருநட்சத்திரம்: ஆடிப்பூரம்)

தமிழிலே காதல் இலக்கியங்கள் ஏராளம். அவற்றில் மனிதனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் பல. அரசனைக்  காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் சில… அவையெல்லாம் ஆடவனை பெண் காதலிக்கும் இலக்கியங்கள். ஆனால்,  ஆண்மையில் பெண்மை கண்டு, அதை ‘நாயகி பாவ’மாகக் கொண்டு, இறைவனை நாயகனாக வரிக்கும் சமய  இலக்கியங்கள்தனிச் சுவை வாய்ந்தவை.

ஆணை பெண் காதலிக்கும்போது வருகின்ற உருக்கத்தைவிட ஆணே பெண்ணாகும் உருவகத்தில் உருக்கம் அதிகம்.  காதலுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் அந்த ஆணாகப் பிறந்த பெண் உருவங்கள் எப்படி எப்படி  கையாளுகின்றனர்! அப்படிக் கையாளும்போது நமது தமிழ் மொழிக்கு இந்து சமயம் வழங்கியுள்ள வார்த்தைகள்தான்  எத்தனை! அவற்றில் ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை’ புதிய தமிழ்ச் சொற்களின் அகராதி என்றே அழைக்கலாம்.

பெண்மையின் காதல் அவஸ்தையைச் சித் தரிக்கும் முத்தொள்ளாயிரப் பாடல்களோ, மற்ற சங்க காலத்து  அகநூல்களோ, ஏன் கம்பராமாயணமோ கூடக் காட்டாத வாண வேடிக்கைகளைப் பிரபந்தம் காட்டுகிறது. தூதும் மடலும்,  உலாவும் பிரபந்தமும் தமிழுக்குப் புதியவையல்ல. ஆனால், பக்திச் சுவையை இலக்கியச் சுவையாக்கித் தமிழ் நயமும்,  ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து படிப்பவர்களுக்குத் தெய்வீக உணர்ச்சியையும், லெளகீக உணர்ச்சியையும்  ஒன்றாக உண்டாக்குவது திவ்வியப் பிரபந்தம். Continue reading

Posted in ஆடி-2017 | Tagged | Leave a comment

4.14 பிச்சைப்பிழைப்பு

-ஸ்ரீ.பக்தவத்சலம்

(ஆங்கிலத்தில்: ஜான்சி)

 

இப்பிறப்பு யார், யாரோ கலந்ததால்

இவ்வறிவு யார், யாரோ கற்பித்ததால்

இம்மொழி யார், யாரோ செப்பியதால்

இக்கவிதை யார், யாரோவின் வார்த்தைகளால்

இவ்வோவியம் யார், யாரோவின் வண்ணங்களால்

இம்மதம் யார், யாரோ போதித்ததால்

இக்கடவுள் யார், யாரோ வணங்கியதால்

இச்சண்டை யார், யாரோ சினந்ததால்

இக்கருணை யார், யாரோ நெகிழ்ந்ததால்

இப்பசி யார், யாரோ மறுத்ததால்

இக்காமம் யார், யாரோ தூண்டியததால்

இப்பிழைப்பே யாரோயிட்ட சாலைகளில்தான்.

ச்சே…. இரந்துண்டே வாழும் எச்சில் பிழைப்பு!

.

இவ்விறப்பு…?

.

பிழைப்பு கடன் யாரோயிட்டது

இறப்பு சுயம் தன்வழி சேர்வது.

.

இறப்பிற்காகக் காத்திருக்கிறேன்

முதற்கலவிக் காலத்தில் கழற்றப்படும்

ஆடைகள் மீதான கவனத்துடன்.

கழற்றிக் கொண்டிருக்கிறது காலம்.

.

போதும்- இரவல் வார்த்தைகளால்

இறப்பை விளக்க விரும்பவில்லை

பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?

.

***

Beggar Life

Tamil version: Sri.Bakthavatsalam

English Translation:  Mrs. Jansi

.

This Birth  Someone’s Fusion

This Knowledge Someone’s Enlighten

This Language  Someone’s Converse

This Poem Someone’s Concept

This Art Someone’s Collude

This Religion  Someone’s Preach

This God Someone’s Prayer

This Anger  Someone’s Acrimony

This Kindness Someone’s Cordial

This Hunger Someone’s Refuse

This Allure  Someone’s Induce

This Life’s flow Someone’s Road

Oops…..Pleading Life Spitted Life!

.

This Death..?

.

Life  Someone’s Offer

Death Its Own Path.

.

Like conscious on unfastening clothes

In First Love making

Time is unhooking

.

Enough Unwilling to Explain

Death in lending words

Whetherlast rights done by begging?

.

Posted in ஆடி-2017 | Tagged , , | Leave a comment

4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரித்திரத்தின் ரத்த சாட்சி

-முத்துவிஜயன்

லஜ்ஜா


லஜ்ஜா

தஸ்லிமா நஸ்ரின்

தமிழில்: ஜவர்லால்

கிழக்கு பதிப்பக வெளியீடு,

177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங்,

லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014

தொலைபேசி: 044- 4200 9601.


பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்.

1992, டிசம்பர் 6: இந்தியாவின் அயோத்தியில், ராமஜென்மபூமியில் இருந்த பாபர் மசூதி என்ற பழைய கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. உண்மையில் கட்டுக்கடங்காத கரசேவகர்களின் உள்ளக் கொந்தளிப்பால் நிகழ்ந்த வன்முறை அது. அங்கு ஏற்கனவே இருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டு அதன்மீது பாபரின் படைத்தளபதி மீர்பாகி கட்டிய அடிமைச்சின்னமான பாபர் மசூதியின் தகர்ப்பு, உலக அளவிலும், தேசிய அளவிலும் நிலநடுக்கம் போன்ற அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிகழ்வு. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் அசுர வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த ராமர் கோயில் இயக்கம், மசூதி இடிப்பை அடுத்து சற்றே தேக்கம் அடைந்தது.

எனினும், பாரத ஹிந்துக்களுக்கு, டிச. 6, ஓர் அடிமைச்சின்னம் அகற்றப்பட்டதன் வெற்றித் திருநாள்தான். இந்திய அரசியலை அதுவரை வழிநடத்திய போலித்தனமான மதச்சார்பின்மையை கேள்விக்குறி ஆக்கிய நாளும் அதுவே. ஆனால், அந்த மசூதி இடிப்பின் எதிரொலி நமது அண்டை முஸ்லிம் நாடுகளிலும் ஒலித்ததை இந்தியர்கள் பேரளவில் அறியவில்லை. குறிப்பாக இந்திய உதவியால் பாகிஸ்தானிடமிருந்து 1971-இல் சுதந்திரம் பெற்ற பங்களாதேஷில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொடுங்கரங்களுக்குள் சுமார் 10 நாட்கள் அந்நாட்டு ஹிந்துக்கள் சிக்கிக் கொண்டார்கள். அந்த நாட்களில் கொல்லப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை பலநூறு; இடிக்கப்பட்ட கோயில்கள் பல்லாயிரம்; கண்ணுக்குத் தட்டுப்பட்ட ஹிந்துப் பெண்கள் பலரும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஹிந்துக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து விரட்டப்பட்டனர். அவர்களில் லட்சக் கணக்கானோர் இந்தியாவுக்கு அகதியாக வர நேரிட்டது. அந்த நாட்களில் நிகழ்ந்த இஸ்லாமிய வெறியர்களின்  மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளை அரிய ஆவணமாகவும், நெஞ்சை உலுக்கும் சமூகப் புதினமாகவும் பதிவு செய்திருக்கிறார், தஸ்லிமா நஸ்ரின். Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

4.16 கேளாச் செவிகளும் குருட்டு நடிகர்களும்…

-சந்திர.பிரவீண்குமார்

 

.

அவர்களிடம் ஓலமிடாதீர்கள்.

காதுகள் சில வேளை,

செவிடாகி விட்டிருக்கக் கூடும்.

.

நடுநிலையை எதிர்பார்க்காதீர்கள்.

தராசின் ஒரு பாகம்

நசுங்கிப் போயிருக்கக் கூடும்.

.

அவர்கள் முன்னே அழாதீர்கள்.

கண்கள் குருடானது போல

நடிக்கவும் கூடும். Continue reading

Posted in ஆடி-2017 | Tagged , | Leave a comment

காண்டீபம்- சித்திரை 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு

தூணி- 1; அம்பு-3

சித்திரை, வைகாசி, ஆனி- 2017 இதழ்

***

உள்ளடக்கம்

 

 

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.7 எது நமது புத்தாண்டு?

-எஸ்.ராமச்சந்திரன்

புத்தாண்டு சிறப்புக் கட்டுரை- அட்டைப்படக் கட்டுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்று அண்மையில் பேசியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வருவது, சட்டம் இயற்றுவதெல்லாம் இருக்கட்டும்; தமிழ் மரபு எது என்று முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இக் கட்டுரை எழுதப்படுகிறது.

திண்ணை.காம் இணைய இதழில் 17.04.2006 அன்று  ‘சித்திரையில்தான் புத்தாண்டு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தி.மு.க அரசு (2006-2011) தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு எனச் சட்டமன்றத்தில் சட்டமியற்றியபோது இக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்  ‘தினமணி’ நாளிதழில் வெளிவந்தது. அதன்பிறகு, ஓகை நடராஜன் போன்ற நண்பர்களுடனான கலந்துரையாடலின் விளைவாகப் பல புதிய கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவற்றுக்கான விடைகளும் கண்டறியப்பட்டன. அந்த அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

முதலில் ஆண்டு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். சம்ஸ்க்ருதத்தில் வழங்குகிற வருஷம் என்ற சொல் மழைக்காலத்தைக் குறிக்கிற வர்ஷருதுவைத் தொடக்கமாகக் கொண்ட காலக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பெயர். அதாவது கடுங்கோடை முடிந்து மழைக்காலம் தொடங்குகிற ஆவணி மாதத்தில்தான் ‘வர்ஷம்” பிறக்கும். வருடம் என்று தமிழில் இச்சொல் வழங்கினாலும், மழைக்காலத் தொடக்கத்தை வருடப் பிறப்பாகக் கொள்வதில்லை. சம்ஸ்க்ருதத்தில்  ‘சம்வத்ஸரம்’  என்ற சொல்லே ஆண்டு என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், இவ்வாறு ஆவணி மாதத்தை ஆண்டுப் பிறப்பாகக் கருதுகிற ஒரு மரபு இருந்துள்ளது என்பதற்கு தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சான்றளிக்கிறார். Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment