Category Archives: சித்திரை-2017

காண்டீபம்- சித்திரை 2017 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு தூணி- 1; அம்பு-3 சித்திரை, வைகாசி, ஆனி- 2017 இதழ் *** உள்ளடக்கம்   3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 3.2 இறைவனை வழிபடு 3.3 குமரப்பாவின் தனிமனிதன் 3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2 3.5 மஹாபுருஷர் ஸ்ரீ ராமானுஜர் 3.6 மறுவாழ்வு 3.7 எது நமது புத்தாண்டு? 3.8 விவேகானந்த பஞ்சகம் 3.9 தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா? … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.7 எது நமது புத்தாண்டு?

-எஸ்.ராமச்சந்திரன் புத்தாண்டு சிறப்புக் கட்டுரை- அட்டைப்படக் கட்டுரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்று அண்மையில் பேசியுள்ளார். அவர்கள் ஆட்சிக்கு வருவது, சட்டம் இயற்றுவதெல்லாம் இருக்கட்டும்; தமிழ் மரபு எது என்று முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ளட்டும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

  அன்பிற்கினிய வாசகர்களுக்கு, நமஸ்காரம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கும் எதிலும் மங்கலம் நிறைந்திருக்க இறையருள் துணை புரியட்டும். பாரம்பரியம் என்பது ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் பலவிதங்களில் ஊடும் பாவும் போல பின்னிக் கொண்டிருக்கக் கூடிய ஒன்று. பண்டிகைகள், திருவிழாக்களும் மிகப் பழமையான பாரம்பரியம் என்பதோடு மட்டுமல்லாமல்,  மக்களனைவரையும் ஒரே புள்ளியில் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.2 இறைவனை வழிபடு

  –கவிஞர் குழலேந்தி   இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு அறிவிலியே! மறைபல மனனம் செய்வதனாலுன் மாரகம் தவிர்ந்து போய்விடுமா? பொருள் மிக விரும்பும் மூடா, மூடா! பொதியெனும் ஆசை அகற்றிவிடு! தருமமுரைக்கும் கடமையினைச் செய் தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக! மங்கையர் தனமும் நாபியும் கண்டு மதியினை இழந்து பதறாதே! அங்கம் முழுதும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

3.3 குமரப்பாவின் தனிமனிதன்

-மருத்துவர் சுனீல்கிருஷ்ணன் 125-ஆம் ஆண்டு காணும் காந்தியப் பொருளாதார அறிஞர் ஜோசப் கர்னேலியஸ் குமரப்பா அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரை. ஜே.சி.குமரப்பா (1892, ஜனவரி 4- 1960, ஜனவரி 30) “எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை நம்புகிறோம். தனி மனிதன் மனதில் எழும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | 1 Comment

3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2

-ம.வே.பசுபதி பகுதி -2     தொல்பழந்தமிழ் நூல்களாக நமக்குக் கிடைத்திருப்பனவற்றுள் மிகப் பழமையானது தொல்காப்பியமேயாகும். அதன் காலம் பொ.மு. ஐந்தாம் நூற்றாண்டென்பர். தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும், தமிழிலுள்ள அனைத்து இலக்கிய மூலக்கூறுகட்கும் மூலவிதைகள் அந்நூலிலேயே உள்ளன. அது கருதியே தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்தியே இலக்கிய வரலாற்றாய்வு மேற்கொள்வதை மரபாகக் கொண்டுள்ளனர். அம் மரபுபற்றி, தேடலை … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.5 மஹாபுருஷர் ஸ்ரீ ராமானுஜர்

–சுவாமி ராமகிருஷ்ணானந்தர்   ஸ்ரீமத் ராமானுஜர் திருநட்சத்திரம்:  சித்திரை- திருவாதிரை (01.05.2017) ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக, அந்த மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இங்கே வெகு சிலரே. ஆனால் தென்னிந்தியாவில் ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமை மிகவும் ஓங்கியுள்ளது. ஸ்ரீராமானுஜர் எந்த … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.6 மறுவாழ்வு (சிறுகதை)

-சுப்ரபாரதிமணியன் மேகம் கறுத்து இருட்டாக்கியது. நான்கு நான்காய் இரு பக்கங்களிலும் எட்டு அறைகள் இருந்தன. அந்த ’ ‘லைன் வீட்டில்’’  மேற்குப் பக்கம் குளியலறை,  கழிப்பறை போன்று ஏதோ தென்பட்டது. முத்துலட்சுமி பரபரவென்று குளியலறைப் பக்கம் எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்தாள். எட்டு வீட்டுக் கதவுகளும் எந்த நிலையில் உள்ளன என்று பார்க்கிற மாதிரி … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment

3.8 விவேகானந்த பஞ்சகம்

–சுவாமி விபுலானந்தர்    வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ அருமுனிவ  ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்? 1 . அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ? ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ? முடிந்தமுடி பாகியவே தாந்தத்தின் பொருளை மொழிந்தவித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கோ? 2

Posted in சித்திரை-2017 | Tagged , | Leave a comment

3.9 தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா?

-பத்மன் “விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய்?” என்று மகாகவி பாரதி புலம்பிய வரிகளை இரவல் வாங்கத் தோன்றுகிறது, இன்றைய தமிழறிஞர்கள் சிலரது கூற்றுகளை செவிமடுக்கும்போது. ‘திராவிடர்களான தமிழர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டுவிட்டது, ஆகையால் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல’ என்று சில தமிழறிஞர்கள் முழங்குகிறார்கள். இவ்வாறு கூறுவதன் மூலம் ஹிந்து என்று பொதுவான பெயரில் வழங்கப்படும் … Continue reading

Posted in சித்திரை-2017 | Tagged | Leave a comment