6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

-என்.டி.என்.பிரபு

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630, பிப். 19)

 தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின்  வாழ்க்கையாகும்.

பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும்  உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி.

இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630,  பிப்  19 -ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார்.சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த வீரனாக, பகைவர்களை வெல்பவனாக,அரசாட்சி செய்பவனாக, ஹிந்து ராஜ்யம் அமைப்பவனாக விளங்கவேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்.

எனவே சிவாஜி பிறந்ததும் “தாயே, ஹிந்து தேசத்தை பெரியதாக்கி அதையும் சீக்கிரமாக எங்கள் கண்முன் காட்டுவாயாக” என வேண்டிக்கொண்டார். சிவாஜிக்கு,ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து ராமர்,கிருஷ்ணர் மற்றும் பலரின் வீர தீரங்களையும் கதைகளாகச் சொல்லிவந்தார்.

தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பொறுப்பில் சிவாஜியை வளர்க்க ஏற்பாடு செய்தனர். மேலும் புனே பாளையத்தின் நிர்வாகப்  பொறுப்பையும் தாதாஜியிடமே கொடுத்தனர். தாதாஜி பொறுப்பேற்ற பின்பு புனே பாளையம் செழிப்பான நிலைக்கு வந்தது.

விவசாயத்தை மக்களிடம் உற்சாகப்படுத்தவும்,மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஏர் ஒன்றை சிவாஜியைக் கொண்டு உழச் செய்தார் தாதாஜி. மக்களுக்கு தன்னம்பிக்கையும் புது தெம்பும் பிறந்தது.

சிவாஜி, வாள், வில் பயிற்சியும், குதிரையேற்றம்,யானை ஏற்றம் போன்ற பயிற்சிகளைப்  பெற்றார். போர் செய்யும் கலைகளை அறிந்தார். மேலும் மராத்தி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளைக்  கற்றார். சிவாஜி தன் நண்பர்களுடன் மலை, அடர்ந்த காடுகளில் சுற்றினார். சில இளைஞர்களைக் கொண்டு படை ஏற்படுத்தினார். சுதந்திர தேசத்தை உருவாக்கும் எண்ணத்தில் உறுதிகொண்டிருந்தார்.

அதன் தொடக்கமாக ரோஹித் கோட்டைக்குள் இருக்கும் ஆலயத்தில் நண்பர்களுடன் இறைவனை பிரார்த்தனை செய்தார். அப்போது தன் உடைவாளையெடுத்து தன் விரலை கீறி ரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்றார். அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் அவ்வாறே சபதம் ஏற்றனர்.

1646 ம் ஆண்டு பிஜாபுரின் தோரன் கோட்டையை வென்றார். பின்பு சாகன் கோண்டனா, புந்தர் கோட்டைகளை கைப்பற்றினார். தொடர்ந்து பல கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டே இருந்தார்.சிவாஜி வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு, பீஜப்பூர்  சுல்தான், சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார்.

இந்த சூழ்நிலையில் சிவாஜி, மொகலாயப் பேரரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நாங்கள் தங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம் என்பதாகக் குறிப்பிட்டார். மொகலாய மன்னர் சாஜி, மற்றும் சிவாஜியின் வீரத்தை அறிந்திருந்ததால், இவர்கள் நம்முடன் இருப்பது நல்லது என நினைத்து சாஜியை விடுதலை செய்ய செய்தார்.

சிவாஜி எப்போதும் தன்முன் வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு,  எந்தெந்தக் கோட்டைகளை பிடிக்கலாம் என ஆலோசனை செய்வார். இந்த இவருடைய திட்டமிடலால், அவருடைய ராஜ்யம் விரிவாகிக் கொண்டே போனது.

பீஜப்பூர் சுல்தான் இறந்த பிறகு அவருடைய மகன் சிறுவனாக இருந்ததால் பீஜப்பூர் சுல்தானின் மனைவி சாயிபா அரசை கவனித்துவந்தார். ஒரு ஹிந்து பீஜப்பூர் மொகலாய அரசை எதிர்ப்பதைக் கண்டு அவமானப்பட்டாள். எனவே சிவாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டினாள். இத்திட்டத்தை அப்சல்கான், தான் செய்வதாக ஏற்றுக்கொக்கொண்டான்.

அப்சல்கானும் சிவாஜியும் சந்திக்க ஏற்பாடாகியது. அப்சல்கான் உருவம் பெரியது;  மாமிச மலை. சிவாஜி உருவமோ சிறியது. அப்சல்கான், சிவாஜி வந்ததும் கட்டித் தழுவிக் கொண்டான். கட்டி இறுக்கினான். பிடியிலிருந்து விலக முயலும்போது தன் உடைவாளை எடுத்து விலாவில் பாய்ச்சினான். சிவாஜி தான் அணிந்திருந்த கவசத்தால் தப்பினார். அப்சல்கான் சற்றும் எதிர்பாரா விதமாக சிவாஜி புலி நகங்களை கொண்டு அவனது வயிற்றில் குத்தி கிழித்தார்.  பின் பீஜப்பூரை வென்றார்.

சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்துவருவதை எப்படியும் தடுக்க வேண்டும் என்று முகலாய மன்னர் அவுரங்கசீப் நினைத்தார். ஷெயிஷ்டகான் என்பவன் தலைமையில் படையை அனுப்பிவைத்தார். திருமண ஊர்வலம் போன்று வேஷமிட்டு கோட்டைக்குள் சென்று அவர்கள் அயரும் நேரம் பார்த்து அவர்களை விரட்டியடித்தார் சிவாஜி. மேலும் எருதுகளின் கொம்புகளில்  துணிப் பந்தங்கள் கட்டி அதில் தீ வைத்தனர். முகலாயர்கள் சிவாஜியின் படை என்று எண்ணி மிரண்டு ஓடினர்.

எனினும், முகலாயரின் படைத்தளபதி ஜயசிங்குடன் போர் புரியாமல், நாட்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற காரணத்தால் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹிந்து ஒற்றுமைக்கு அழைப்பு  விடுத்தார். மெதுவாக ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியை செம்மையாக செய்துவந்தார். 1674 ம் ஆண்டு பட்டாபிஷேகம் செய்து கொண்டார். சத்ரபதி பட்டம் வழங்கப்பெற்று சத்ரபதி சிவாஜி ஆனார்.

நீதியின் வழியில் அவர் தன் வாழ்க்கையைச் செலுத்தினார். சிவாஜி சிறந்த ஆட்சியாளராய் திகழ்ந்தார். மிகச்சிறந்த ராஜதந்திரியாக விளங்கினார். சமர்த்த ராமதாசரின் ஆசியுடன் செயல்களை செய்து வந்தார்.

சிவாஜி தன்னுடைய நன்னடத்தை, திடமான சக்தி மற்றும் தேச பக்தியினால் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். அவரின் ஆட்சியில் அனைத்து மக்களும், அவரவர் சம்பிரதாயத்தில் நடக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் நிருவியபோதிலும் பிற மதங்களை அவர் வெறுக்கவோ, நசுக்கவோ இல்லை.

தனது குருநாதர் சமர்த்த ராமதாசரிடம் குருதட்சிணை­யாக ராஜ்யத்தை சமர்ப்பித்து, அவரின் பிரதிநிதியாக எண்ணியே ஆட்சி செய்து வந்தார்.சிறுதுகாலம் நோய்வாய்பட்டிருந்த சிவாஜி 1680ம் ஆண்டு ஏப். 3  ம் தேதி தேதி இயற்கை எய்தினார்.

பல நூற்றாண்டுகளில் செய்ய செய்ய வேண்டிய சாதனைகளை வெறும் 53 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த சிவாஜி, செய்து முடித்தார். வெற்றியை மட்டுமே சிந்தையில் கொண்ட சத்ரபதி சிவாஜி, வெற்றிக்கு சிறந்த உதாரணம் ஆவார். எனவேதான் தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் சிவாஜி ஒரு லட்சிய புருஷராக விளங்கி வருகிறார்.

 

குறிப்பு:

திரு.என்.டி.என்.பிரபு, விஜயபாரதம் வார இதழில் வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s