6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்

-முத்துவிஜயன்

ஞானசங்கமம் கருத்தரங்க துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெருமக்கள்.

அகில பாரத பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தமிழகக் கிளையான தேசிய சிந்தனைக் கழகம், தென்பாரத அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கத்தை, தாம்பரம்- தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடத்தியது.

‘தேச வளர்ச்சியில் அறிவுலகின் பங்களிப்பு’ (Role of Intellectuals in Nation Building) என்ற தலைப்பில், 2017, நவம்பர் 18, 19, சனி.ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் தேச வளர்ச்சியின் திசையைத் தீர்மானிப்பவர்கள். துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டில் கல்வித் துறையில் நேரிட்டுள்ள தார்மிக வீழ்ச்சியால் நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு எதிரானதாகவே உயர் கல்வி நிறுவனங்கள் மாறி வருகின்றன. உயர்கல்வி அமைப்புகளில் இடதுசாரி அரசியல் சார்புக் கண்ணோட்டத்தால், பண்பாட்டு விழுமியங்களைப் புறக்கணிக்கும் போக்கும், தேசிய ஒற்றுமையைச் சிதைக்கும் காட்சிகளும் தென்படுகின்றன. இந்நிலையை மாற்றுவதும், புதிய இந்தியாவுக்கான இளம் தலைமுறையினரை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும். அதுவே இக்கருத்தரங்கத்தின் இலக்காக இருந்தது.

தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய 6 மாநிலங்களிலிருந்து, 85 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 224 கல்வியாளர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகம், பாண்டிச்சேரி பகுதிகளின் 41 கல்வி நிறுவனங்களிலிருந்து 138 கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.

கல்வி நிறுவனங்களில் பிரிவினைச் சிந்தனைகளைக் களையவும், தேசபக்தியும் தலைமைப்பண்பும் மிகுந்த மாணவர்களை உருவாக்கவும் கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கருத்தரங்கில் பங்கேற்றோர்

கலந்துகொண்டோர் விவரம்:

 • தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய 6 மாநிலங்களிலிருந்து, 85 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 224 கல்வியாளர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.

வரிசை எண்/ மாநிலம்/ கல்வி நிறுவனங்கள்/ கலந்துகொண்டோர் எண்ணிக்கை:

 1. ஆந்திரப் பிரதேசம்…….5……….5
 2. தெலுங்கானா……………10…….24
 3. கர்நாடகம்………………….21……..41
 4. கேரளம்……………………….8……..16
 5. தமிழ்நாடு………………….38……134
 6. பாண்டிச்சேரி……………..3………..4

———————————-

    மொத்தம்………………85……..224

வழிகாட்டிய பெருமக்கள்:

 1. பேரா. திரு. ம.வே.பசுபதி,

மாநிலத் தலைவர், தேசிய சிந்தனைக் கழகம், தமிழ்நாடு.

 1. திரு. ஜே.நந்தகுமார்,

அகில பாரத அமைப்பாளர், பிரக்ஞா பிரவாஹ், புதுதில்லி.

 1. பேரா. திரு. இரா.வன்னியராஜன்,

தென்பாரதத் தலைவர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், மதுரை.

 1. முனைவர் திரு. கிருஷ்ண கோபால்,

அகில பாரத இணை பொதுச்செயலாளர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், நாகபுரி.

 1. பேரா. திரு. ஏ.கலாநிதி,

மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.

(கருத்தரங்க வரவேற்புக் குழுவின் தலைவர்)

 1. திரு. முகுல் கனித்கர்,

அகில பாரத அமைப்பாளர், பாரதீய சிக்‌ஷண் மண்டலி, புதுதில்லி.

 1. திரு. சங்கராந்த் சாணு,

மொழியியல் ஆராய்ச்சியாளர், ஹரியாணா.

 1. முனைவர் திரு. எஸ்.கல்யாணராமன்,

சரஸ்வதி நதி நாகரிக ஆராய்ச்சியாளர், சென்னை.

 1. சுவாமி மித்ரானந்தர், சின்மயா மிஷன், சென்னை.
 1. ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி,

ஆசிரியர், துக்ளக்- வார இதழ், சென்னை.

 1. திருமதி தங்கம் மேகநாதன், கல்வியாளர், சென்னை.
 1. பேரா. ப.கனகசபாபதி, சாஸ்திரா பல்கலைக்கழ்கம், தஞ்சாவூர்

(கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்).

 1. திரு. வி.பிராமமூர்த்தி, தலைவர், தனலட்சுமி பொறியியல் கல்லூரி, தாம்பரம்.
 1. திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி, தாம்பரம்.
 1. முனைவர் திரு. கே.ஜெயபிரசாத், மத்திய பல்கலைக்கழகம், காசர்கோடு, கேரளா.
 1. பேரா. சி.ஐசக், துணைத் தலைவர், பாரதீய விசார் கேந்திரம், திருவனந்தபுரம்.
 1. பேரா. மனோகர் ராவ், பிரக்ஞாபாரதி, ஹைதராபாத்.
 1. பேரா. ரகு அக்மந்தி, பெங்களூரு.
 1. பேரா. கே.சம்பத்குமார், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
 1. பேரா. கோபால் ரெட்டி, யு.ஜி.சி, ஹைதராபாத்.
 1. முனைவர் திரு. லக்‌ஷ்மி நாராயணா, பிரக்ஞாபாரதி, ஹைதராபாத்.

மொழிகள் மூலமாக தேசிய ஒருமைப்பாடு குறித்து உரையாற்றிய திரு. சங்கராந்த சாணு.

கருத்தரங்க நிகழ்வுகள்:

இக்கருத்தரங்கம் மூன்று வகையான அமர்வுகளாக நடத்தப்பட்டது.

 1. அனைவரும் கலந்துகொண்ட பிரதான அமர்வுகள்- 6

அ. துவக்க நிகழ்ச்சி

– திருவாளர்கள் ம.வே.பசுபதி, ஜே. நந்தகுமார், பேரா. இரா.வன்னியராஜன், முனைவர் கிருஷ்ண கோபால், பேரா. ஏ.கலாநிதி, முனைவர் வி.பி.ராமமூர்த்தி, திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்பு.

ஆ. மொழிகள் மூலமாக தேச ஒருமைப்பாடு குறித்த அமர்வு

-திரு. முகுல் கனித்கர், திரு. சங்கராந்த சாணு பங்கேற்பு.

இ. தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள் குறித்த அமர்வு

-திரு. ஜி.வி.ஹரீஷ், முனைவர் திரு. கே.ஜெயபிரசாத் பங்கேற்பு.

ஈ தேசியம் என்ற சிந்தனை குறித்த அமர்வு

-முனைவர் திரு. எஸ்.கல்யாணராமன், சுவாமி மித்ரானந்தர் பங்கேற்பு.

உ. கேள்வி -பதில் நிகழ்ச்சி – ஆடிட்டர் திரு. எஸ்.குருமூர்த்தி

– மருத்துவர் திரு. துளசிதாஸ், பேரா. திரு. கோபால் ரெட்டி பங்கேற்பு.

உ. நிறைவு நிகழ்ச்சி:

திருமதி தங்கம் மேகநாதன், பேரா. திரு. ப.கனகசபாபதி பங்கேற்பு.

 1. மாநில/ மொழி வாரியாக கல்வியாளர்கள் பங்கேற்ற இணை அமர்வு- 1

உயர்கல்வி நிறுவனங்களில் பிரிவினைப் போக்குகள் குறித்த விவாதம்:

 (4 குழுக்களாக இந்த இணை அமர்வு நடத்தப்பட்டது).

-திருவாளர்கள்…

பேரா. ம.வே.பசுபதி, முனைவர் கே.சம்பத்குமார் (தமிழ்),

பேரா. சி.ஐ.ஐசக், முனைவர் கே.ஜெயபிரசாத் (மலையாளம்),

பேரா. ரகு அக்மந்தி,   கிருஷ்ணபிரசாத் கல்லட்கே (கன்னடம்),

பேரா. மனோகர் ராவ், கோபால் ரெட்டி, முனைவர் லக்‌ஷ்மிநாராயணா (தெலுங்கு)

பங்கேற்பு. 

 1. பாட வாரியாக கல்வியாளர்கள் பிரிந்து நடத்திய இணை அமர்வு- 1

ஒவ்வொரு துறையிலும் செயல்திட்டம் உருவாக்குவது குறித்த ஆலோசனை 

(கலை, சமூகவியல், மொழியியல், நிர்வாகவியல் பாடங்கள் தனியாகவும்,

அறிவியல், பொறியியல் பாடங்கள் தனியாகவும் பிரித்து – இரு குழுக்களாக நடத்தப்பட்டது).

நிகழ்வும் நிறைவும்:

 • 11.2017, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கருத்தரங்கம், கல்விக் கடவுளாம் சரஸ்வதி வணக்கத்துடன் துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டார்.
 • அம்பத்தூர், காமகோடி நாட்டியாலயா குழந்தைகளின் பரத நாட்டியக் கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.
 • 11.2017, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் தேசிய கீத்த்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 • கருத்தரங்கத்தின் வரவேற்புக் குழுத் தலைவராக- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் திரு. ஏ. கலாநிதி அவர்களும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக- தஞ்சாவூர் சாஸ்த்ரா  பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி அவர்களும் பொறுப்பேற்று கருத்தரங்க நிகழ்வுகளை நடத்தினர்.
 • தாம்பரம், தனலட்சுமி பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் அனைவரும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற பூரண ஒத்துழைப்பு நல்கினர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் திரு. ம.கொ.சி.இராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், கருத்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2018 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s