5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு,
.
நமஸ்காரம்.
 .

இந்த மடல் எழுதும் நேரம் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைந்திருக்கிறது. விவசாயிகளின் பூமி இது. விதைத்து அறுவடை செய்வதற்கு எத்தனை காலம் பிடிக்கும். அதற்குள் அந்தப் பயிரைப் பராமரிக்க எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்பது விவசாயிக்குத் தெரியும். அதுபோல இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நல்ல விளைவுகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

முதலீடுகளுக்கு உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்த ஒரே ஆண்டில் முப்பது இடங்கள் இந்தியா முன்னேறியிருக்கிறது. போலி கம்பெனிகள் கண்டறியப்பட்டுள்ளன; வரி ஏய்ப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்; நிறைய பேர் வருமானவரி வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்; மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் பழக ஆரம்பித்துள்ளனர். நிச்சயம் இதன் பலன் மக்களுக்கும் இந்த தேசத்திற்கும் மிகப் பெரும் நன்மையை அளிக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

தேசம் பல துறைகளிலும் வளர்ச்சி பெறுகிறது; பெறும் என்ற நம்பிக்கையும் வேண்டும். எண்ணங்கள் நேர்மறையாக அமையக்கூடின் நிச்சயம் இந்த நேர்மறை அதிர்வலைகள் நல்ல விளைவுகளை உருவாக்கும்.

இன்று சமீபகாலமாக விளையாட்டுத் துறையிலும் நமது வீரர்கள் சாதித்து வருவது அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது. பெண்கள் ஆசிய ஹாக்கியில் வெற்றியாளர்களாக வலம் வர, மேரிகோம் ஐந்தாவது முறையாக ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார். காமன்வெல்த்தில் பவர்லிப்டில் திருப்பூரைச் சார்ந்த வெங்கடேஷ்பிரபு தங்கப் பதக்கங்களை அள்ளி வந்துள்ளார். இறகுப்பந்து, சதுரங்கம், துப்பாக்கி சுடுதல் என பலதரப்பட்ட விளையாட்டுகளிலும் இன்று இந்திய வீரர்கள் முத்திரை பதித்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த இளையோருக்கான கால்பந்து போட்டிகள் மக்களிடையே ஆர்வத்தினை அதிகப்படுத்தியுள்ளன. கால்பந்து போட்டியிலும் நமது வீரர்கள் முத்திரை பதித்து கோப்பையை வெல்லும் நாள் தொலைவில் இல்லை.

நமது தேசம் சேவை என்பதை ஒவ்வொரு மனிதருக்குமான கடமையின் அங்கமாகக் கருதும் வாழ்வியல் முறையினைக் கொண்டது. ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மிக ஆளுமையினால் ஆட்கொள்ளப்பட்ட சகோதரி நிவேதிதை அயல்நாட்டில் பிறந்திருந்தாலும் இங்கு வந்து சேவையின் அடையாளமாக மாறினார். அவரது 150-வது பிறந்த ஆண்டு தற்போது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது, இந்த நேரத்தில் நமது வாழ்வியல் நெறியான சேவை, நமது இயல்பாக இருக்கட்டும்.

நதிநீர் இணைப்பு விவாதத்துக்கு உரிய ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இருக்கும் நதிகளைக் காப்பதற்கு ஏன் காலதாமதம் செய்ய வேண்டும்? நீர்நிலைகள் நமது வாழ்வுக்கு ஆதாரமானவை. அவற்றைப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட முயற்சிப்போம்.

உங்களின் பாராட்டுதல்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் எங்கள் குழுவினரோடு அடுத்த இதழ்வரை காத்திருக்கும்…

அன்பன்,
 சு.நாராயணன்

குறிப்பு:

திரு. சு.நாராயணன், ‘காண்டீபம்’ இதழின் ஆசிரியர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s