4.21 திருக்குறள் நன்னெறிக் கல்விக்கு சிறப்புக் கையேடு

-ஆசிரியர் குழு

நல்ல சேதி: 

அரசுப் பள்ளி ஆசிரியரின் அரிய முயற்சி

 அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்டுத்தப்பட்டுள்ள திருக்குறள் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்துக்காக சிறப்புக் கையேட்டினைத் தயாரித்திருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளருமான ஆதலையூர் த.சூரியகுமார்.

தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறளை ஒரு பாடமாக்க் கற்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, திருக்குறளின் (இன்பத்துப்பால் தவிர்த்து) அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள அனைத்துக் குறட்பாக்களையும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் சேர்த்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை (எண்: 51) வெளியிட்டது. மேலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது,  வகுப்பை கணக்கீடு செய்து வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் வீதம் பயிற்றுவிக்குமாறும் பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கும்,  மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் சிறப்புக் கையேட்டினைத் தயாரித்திருக்கிறார் ஆசிரியர் த.சூரியகுமார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“திருக்குறளை நன்னெறிப் பாடமாக வகுப்புக்கு 15 அதிகாரங்கள் வீதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு வசதியாக வகுப்புக்கு 15 அதிகாரங்கள் அடங்கிய ஏழு சிறப்புக் கையேடுகளைத் தயாரித்திருக்கிறேன்.  அதிகாரத்துக்கு ஒரு நன்னெறிக் கதை வீதம் இந்தக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் திருக்குறள் கருத்துகளை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்க எளிமையான பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எங்கள் பள்ளி மாணவர்களுக்காக இந்நூல் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேடுகளை புலவர் சங்கரலிங்கம்,  தே.சி.க. மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மேலாய்வு செய்துள்ளனர்” என்றார்..

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி கூறுகையில், “எமது பள்ளி ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் திருக்குறள் நன்னெறிக் கல்விப் பாடநூல்களை ஆசிரியர் சூரியகுமார் தயாரித்திருக்கிறார். ஆசிரியரின் முன்மாதிரியான இந்த முயற்சி பாராட்டுக்குரியது” என்றார்.

அண்மையில், பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நன்னெறிக் கல்வி சிறப்புக் கையேட்டை தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி வெளியிட,  உதவி தலைமை ஆசிரியைகள் மீனலோசனி, சுகந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s