4.20 நல்லுள்ளங்கள் சமைப்போம்!

-ம.கொ.சி.ராஜேந்திரன் 

 

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

(பிறப்பு: 1895, பிப். 1 – மறைவு:  1970, ஆக. 25)

எளிமையும் பணிவும் ஒருங்கே பெற்று வாழ்வில் உயர்ந்தவர்களில் ஒருவர் தமிழக முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவர் ஒருமுறை திண்டிவனம் விருந்தினர் மாளிகையில் தனது பணியின் காரணமாக தங்கிவிட்டு சென்னை திரும்புகிறார்.

மறுநாள் காலையில் அவரது காரோட்டி ஒரு பலாப்பழத்தை நறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அது ஏது என்று  விசாரித்தார். அதற்கு அந்த காரோட்டி, அதை திண்டிவனம் விருந்தினர் மாளிகைத் தோட்டத்திலிருந்து பறித்து எடுத்து வந்ததாக்க் கூறினார்.

உடனே முதலமைச்சரான ஓமந்தூரார் தனது பையிலிருந்த இரண்டு ரூபாய் எடுத்து காரோட்டியிடம் கொடுத்து,  உடனே திண்டிவனம் போய் அந்த பலாபழ்த்தை கொடுத்துவிட்டு வர உத்தரவிட்டார். (அந்த நாளில் சென்னையில் இருந்து திண்டிவனம் போய் வர இரண்டு ரூபாய்தான் பேருந்துக் கட்டணம்). மேலும் அந்த இரண்டு ரூபாய் காரோட்டியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

அதிர்ந்துபோன காரோட்டி, “அந்த பலாப்பழத்தின் விலையே ஒரு ரூபாய் தான் அதைக் கொடுப்பதற்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? என்றார்.

அதற்கு ஓமந்தூரார் உறுதியாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்: ”இந்த இரண்டு ரூபாய், நீ அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததற்கான  அபராதம்” என்றார்.

அதிகாரத்தில் இருந்தபோதும்  தவறான  வழியில் சம்பாதிப்பதை அநீதியாகவும் ஒரு ரூபாய் மதிப்புள்ள பலாப்பழமாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்றும்  வாழ்ந்தவர் ஓமந்தூரார்.

நிர்வாகத் திறனும், எளிமையான வாழ்வும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாத பண்பும், சுயநலத்திற்கு இடம் கொடுக்காத தன்மையும் கொண்ட சர்தார் வல்லபாய் படேல்,  லால் பகதூர் சாஸ்திரி,  காமராஜர்,  ஓமந்தூரார்,  கக்கன்  போன்ற தேசியத் தலைவர்களை இனிவரும் அரசியல் களத்தில் காண முடியுமா?

நல்ல முன்னுதாரணங்களை மறுபடியும் மறுபடியும் அனைவருக்கும் சொல்வோம். நற்கனவுகள் பலிக்கும் நாளுக்காகக் காத்திருக்காமல், அதனைப் படைக்கும் உள்ளங்களைச் சமைப்போம்!

 

குறிப்பு:

திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழத்தின் மாநில அமைப்பாளர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s