4.10 வாழ்க திலகர் நாமம்!

-கவிஞர் குழலேந்தி

லோகமான்ய பாலகங்காதர திலகர்

.

பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!

கங்கா தரனென கயவரும் கலங்குவர்!

திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!

அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!

.

கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;

அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!

என்பது இவரது தத்துவ தரிசனம்!

அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!

.

 ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என

சுள்ளென உறைக்கும் வகையினில் உரைத்தவர்!

உரிமையைப் பேணிட யாசகமா வழி?

உதையே நல்வழி என கர்ஜித்தவர்!

.

வீட்டினில் வசித்த விக்னேஸ்வரர்களும்

வீதியில் வலம் வர வித்தினை இட்டவர்!

தமிழ்க்கவி பாரதி குருவாய் ஏற்றவர்!

தாய் பாரதியின் தவத்தால் உதித்தவர்!

.

 குறிப்பு:

“சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று கர்ஜித்த விடுதலைப் போராட்ட வீரர் லோகமான்ய பாலகங்காதர திலகரின் (ஜூலை 23, 1856 – ஆக. 1, 1920)  161-வது பிறந்த நாள்: ஜூலை 23.

.

 

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s