4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

அன்பிற்கினிய வாசகர்களுக்கு

நமஸ்காரம்.

நமது காலாண்டிதழின் நான்காவது இதழ் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.  முந்தைய இதழ்களின் அழகையும் சுவையையும் நீங்கள் மிக ஆர்வமோடு அழைத்துப் பாராட்டியது எங்கள் குழுவுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம் ஒருபுறம் தனது வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக்கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கான பாதைகள் வாழ்க்கையில் கரடுமுரடாகவும்,  எதிர்பாராத ஆபத்துக்கள் கொண்டதாகவும் அமைந்திருப்பதுதான் இயற்கை.  நாம் எத்தனையோ பேரிடர்களை மிகச் சுலபமாகக் கடந்திருக்கிறோம். அதற்கு நமது சிந்தனை,  தத்துவ ஞானமரபின் தாக்கம், அதன்வழி கண்டடைந்த ஆத்மபலம் உறுதுணையாக இருந்திருக்கின்றன.

இன்று அந்த அடிப்படைகள் இளைய சந்ததியை முழுமையாகச் சென்றடையாமல் இருப்பது நமது பலவீனமே. அதைக் கொண்டுசேர்த்து ஆத்மவளமும் பலமும் பெறுவது இன்றைய தேவையாக உள்ளது.

தொழில் வளர்ச்சி என்பது நமது ஆதாரத் தொழிலான விவசாயத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகவோ, இயற்கை வளங்களை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அமைந்துவிடக் கூடாது. விவசாயம் மேலும் சிறப்புற என்ன செய்யலாம் எனச் சில சிந்தனைகளை முன்னெடுக்கும் விதமான கட்டுரை இந்த இதழில் இடம்பெறுகிறது. இதுகுறித்த உங்கள் எண்ணங்களை அடுத்த இதழில் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

வளர்ச்சியின் பாதையில் இன்று நம் தேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வரியின மாற்றங்கள் மிக அதிக விவாதங்களை உண்டாக்கியுள்ளன. அதுகுறித்த விரிவான ஒரு கட்டுரையை பட்டயக் கணக்காளர் திரு.சிவசுப்ரமணியம் அளித்துள்ளார்.

தேசத்திற்கு அச்சுறுத்தல்களும், அண்டை நாடுகள் மூலமாகவும், பயங்கரவாதிகள் மூலமாகவும் இருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ளக் கூடிய திறன் கொண்ட அரசும்,  ராணுவமும் ஒருங்கமைந்துள்ளது இறைவன் செயல்.

நமது இன்றைய மிக முக்கியப் பணி எதிரிகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் வேறுபாடுகள் களைந்து தாய்நாட்டினைக் காக்க ஓரணியில் நிற்பதற்கு  எப்பொழுதும் தயாராய் இருப்பதுதான். பராசக்தி அருள் நமக்குத் துணையிருக்கட்டும்!

இவ்விதழில் கட்டுரைகளோடு இனிய கவிதைகளும் உங்களுக்கு விருந்தாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. களிப்புடன் சுவையுங்கள்.

உங்களின் பாராட்டுதல்களுக்காகவும், அற்புத விமர்சனங்களுக்காகவும் எங்கள்கு ழுவினரோடு அடுத்த இதழ்வரை காத்திருக்கும்

அன்பன்,

சு.நாராயணன்

குறிப்பு:

திரு. சு.நாராயணன், ‘காண்டீபம்’ இதழின் ஆசிரியர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s