4.16 கேளாச் செவிகளும் குருட்டு நடிகர்களும்…

-சந்திர.பிரவீண்குமார்

 

.

அவர்களிடம் ஓலமிடாதீர்கள்.

காதுகள் சில வேளை,

செவிடாகி விட்டிருக்கக் கூடும்.

.

நடுநிலையை எதிர்பார்க்காதீர்கள்.

தராசின் ஒரு பாகம்

நசுங்கிப் போயிருக்கக் கூடும்.

.

அவர்கள் முன்னே அழாதீர்கள்.

கண்கள் குருடானது போல

நடிக்கவும் கூடும்.

.

அவர்கள் எழுதுவார்கள் என

ஏமாந்து போகாதீர்கள்.

அக் கரங்கள் தீண்டிய பேனா மை

உலர்ந்து விட்டிருக்கக் கூடும்.

.

வாய் மூடியிருக்கிறார்களே என்று

ஆதங்கத்தைக் காட்டாதீர்கள்.

அவர்களது உதடுகள் ஏற்கெனவே

அடைபட்டிருக்கக் கூடும்.

.

அவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள்…

நியாயத்தை-

உண்மையை-

யதார்த்தத்தை-

ஒரேயடியாக மறுத்துவிடக் கூடும்…

.

அவர்களைப் புறக்கணியுங்கள்.

உங்களுக்கான குரல்களை

நீங்களே எழுப்புங்கள்.

பயந்தவர்கள் துணிந்து பேசுவார்கள்

என நம்பி விடாதீர்கள்.

கழுகுகள் குயில்களாகும் என

கனவுகள் காணாதீர்கள்.

.

இந்தக் கொடிய அம்பின் விஷம்

நாளை அவர்களையே பதம் பார்க்கலாம்.

அரக்கர்களின் கரங்கள்

ஆதரித்தவர்களையே நெரிக்கலாம்.

தீதியும் கண்ணீர் உகுக்கலாம்.

வகுப்புக் கலவரத்தில் எரிந்த சாம்பல்

அவர்கள் முகத்தில் அறையலாம்.

அப்போது பழி தீர்க்க எண்ணி

அவர்களை ஒதுக்கி விடாதீர்கள்.

.

அப்போதேனும் உங்கள் துயரத்தை

அவர்களும் உணர்ந்து கதறட்டும்!

.

 

குறிப்பு:

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பலியானோருக்கும், உடைமைகளை இழந்தோருக்கும் இக்கவிதை சமர்ப்பணம்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஆடி-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s