3.8 விவேகானந்த பஞ்சகம்

சுவாமி விபுலானந்தர் 

சுவாமி விவேகானந்தர்

 

வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு

வையகமே சிறந்ததென வானகத்தோர் வழுத்த

ஆழியிறை யுலகிருந்தோ அரனுலக மிருந்தோ

அருமுனிவ  ருலகிருந்தோ அவனிமிசை யடைந்தாய்? 1

.

அடைந்ததுவும் அருட்டிறத்தின் சிறப்பையுரைப் பதற்கோ?

ஆண்மையிது வெனக்காட்டிக் கீழ்மையகற் றுதற்கோ?

முடிந்தமுடி பாகியவே தாந்தத்தின் பொருளை

மொழிந்தவித்தை தனையகற்றி முத்திநிலை தரற்கோ? 2

.

நிலையிழிந்த பாரதத்தின் குறையனைத்து நீக்கி

நிலைநிறுத்தும் பொருட்டோவிந் நிலவுலகின் மாந்தர்

கலைமொழிந்த பொருளனைத்துங் கடந்து நின்றவுண்மைக்

கந்தழியைச் சார்வதற்கோ வந்தனைசீர்க் குருவே! 3

.

சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்

தேயத்துட் பாரதமே சிறத்ததென விசைப்ப

ஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோ

இளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே! 4

.

அருட்செல்வஞ் செல்வமென அருந்தமிழ் வள்ளுவனார்

அறைந்தமொழிப் பொருளுணர்ந்தோய்! அருந்துறவோர்க் கரசே!

பொருட்செல்வம் மனைசுற்றம் புகழ்துறந்த நினக்குப்

புவியனைத்துஞ் சுற்றமே;  புகழனைத்தும் நினதே. 5

.

வாழியநின் றிருநாமம்! வாழியவிந் நாடு!

 

குறிப்பு:

சுவாமி விபுலானந்தர்

வணக்கத்திற்குரிய சுவாமி விபுலானந்தர்  (1892, மார்ச் 27-  1947, ஜூலை) இலங்கையைச் சார்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் முதல் சந்நியாச ஆசிரியர். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த முன்னோடி ஆராய்ச்சியாளர்.

அவர் தனது குருநாதர் சுவாமி விவேகானந்தர் (1863, ஜனவரி 12- 1902 ஜூலை 4) குறித்து எழுதிய கவிதை இது…

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s