3.17 பலமே வாழ்வு!

டாக்டர் ஹெட்கேவார்

டாக்ட ஹெட்கேவார்

டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்

(1889 ஏப்ரல் 1- 1940 ஜூன் 21)

”நாம் சக்திசாலிகளாக இருந்திருந்தால் நம்மீது படையெடுக்கும் அளவுக்கு  யாருக்காவது துணிச்சல் இருந்திருக்குமா?  அல்லது நம்மை வேறு எந்த வகையிலாவது அவமானப்படுத்தி இருப்பார்களா?

பின் ஏன் மற்றவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும்? குற்றம் நம்முடையதுதான் என்றால் அதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நமது பலவீனங்களையும் குறைகளையும் போக்கிக்கொள்ள முயல  வேண்டும்.

நாம் பலவீனமாக இருக்கும் வரையில் நம் மீது ஆக்கிரமிப்பு செய்ய பலசாலிகளுக்கு நப்பாசை இருந்து கொண்டுதானிருக்கும். இது இயல்பானதே. பலசாலிகளைத் திட்டுவதாலோ,  அவர்களை நிந்திப்பதாலோ, பயன் என்ன? இப்படிச் செய்வதால் நிலைமை மாறிவிடாது.

தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக நம்மீது அந்நிய ஆக்கிரமிப்புகள் ஏன் நடைபெற்று வருகின்றன? நாம் பலவீனர்களாக, நடைபிணங்களாக உலவுகிறோம் என்பதால்தானே? நாம் படுகிற துன்பங்களின் வேர் நமது சக்தியற்ற தன்மைதான். அதை முதலில் பறித்து எறிய வேண்டும்.

‘ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம்’  என்பது இயற்கையின் நியதி. அதாவது எப்போதுமே பலவீனமானவர்கள் பலவான்களுக்கு இரையாகிறார்கள். உலகில் பலமற்றவர்கள் மதிப்புடன் வாழ முடியாது. அவர்கள் பலமுள்ளவர்களின் அடிமையாகத் தான் உயிர் வாழ வேண்டியுள்ளது. எப்போதும் அவமானமும், சகிக்க முடியாத இன்னல்களும் தான் அவர்களது தலையெழுத்து.

நமது வீழ்ச்சிக்கு ஆணிவேர் நமது மனதிலுள்ள பலவீனம். அதனை முதலில் போக்குவோம்…

நீங்கள்  உங்களது   தன்னலத்தையும்  செயலற்றிருக்கும்  மனப்பான்மையையும்   வேரோடு  களைந்தெறியுங்கள்   என  நான்   உங்களை வேண்டிக்   கேட்டுக்கொள்கிறேன்.  சமூகசேவைப் பணிகளைப்  புறக்கணித்ததால்  நமது  மனம்  மிகவும்  பலவீனம்  அடைந்துள்ளது.  ‘சமுதாயம்   எக்கேடு கேட்டால் என்ன,   எனது சுயநலம் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி’   என்பது போன்ற  சமுதாயம்  பற்றிய எண்ணம் நமக்குள் நிரம்பியுள்ளது.  இதனால் நமது  சமுதாயம்  இன்று பலமற்றதாகிவிட்டது…

நாம் இதேபோல தன்னலத்தில் மூழ்கி, பலவீனமாகவும், சமுதாய நலனைப் புறக்கணிப்பவர்களாகவும் இருக்கும் வரை, நாம் நல்லவர்களாக மாறாத வரை, நம்மைத்  தீயவரெனக் கருதி பகவான் நமது அழிவுக்கே துணை நிற்பார். நாம் உண்மையிலேயே நல்லவர்கள் ஆகும்போது, அதாவது, தேசம், தர்மம், சமுதாயம் இவற்றின் நலனுக்காக நமது அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராகும்போதுதான் கடவுள் நமக்கு உதவுவார்…”

(ஆதாரம்: வழிக்குத் துணை)

குறிப்பு:

டாக்டர் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s