3.11 எழுத்தாளர்களுக்கு இலக்கணம்

-ஆசிரியர் குழு

 

அசோகமித்திரன்

அசோகமித்திரன்

 (1931, செப்டம்பர் 22- 2017, மார்ச் 23) 

 

தமிழின் முன்னணி  எழுத்தாளர்களுள்  எளிமையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்டவர் அசோகமித்திரன். இவரது எழுத்துகள், எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டவை;  தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை. அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குண்டு.

ஜ.தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 -ஆம் ஆண்டு,  செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார்.

‘டெக்கான் ஹெரால்டு’, ‘இல்லஸ்ரேட் வீக்லி’ உள்ளிட்ட ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன்,  பின்னாளில் தமிழ் சிறுகதை உலகின் ஒரு புதிய நட்சத்திரமாக மிளிர்ந்தார். அவை இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய அவர், அங்கு தனது எழுத்துக்கு உரிய மரியாதை கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறி, 1966 முதல், எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு இறுதி வரை வாழ்ந்தார். தனது சொந்த வாழ்க்கைக்காக யாரிடமும் சமரசம் செய்துகொள்லாதவர் அசோகமித்திரன். அதேபோல யாரையும் புண்படுத்தாத அற்புத மனிதர்.

 

செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட இவரது ’18-வது அட்சக்கோடு’ என்னும் நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து – முஸ்லிம் மக்களிடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது. 8 புதினங்கள்,  250 சிறுகதைகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கியவர்.

பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய புதினங்களையும், இருவர், விடுதலை, தீபம்,  விழா மாலைப் போதில் ஆகிய குறும் புதினங்களையும் அவர் எழுதியுள்ளார். ‘ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்’ உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் பிரபலமானவை.. இவரது பல புதினங்கள்  ஆங்கிலம், இந்தி  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

1996 –இல் ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை  அல்லது  ஹைதராபாத்தை கதைக்களமாக்க் கொண்டிருக்கும். இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து எதையும் தணிந்த குரலில், தாழ்ந்த சுருதியில், அதிராமல் சொல்லிவிடுவார்.  இலக்கிய இதழான ‘கணையாழி’யில் சுமார் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது மகன் வீட்டில் 86 -ஆம் வயதில் அசோகமித்திரன் 2017, மார்ச் 23-இல் மறைந்தார். தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கணமான அவருக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் கண்ணீர் அஞ்சலி.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s