3.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு

 

அன்பிற்கினிய வாசகர்களுக்கு,

நமஸ்காரம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கும் எதிலும் மங்கலம் நிறைந்திருக்க இறையருள் துணை புரியட்டும்.

பாரம்பரியம் என்பது ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் பலவிதங்களில் ஊடும் பாவும் போல பின்னிக் கொண்டிருக்கக் கூடிய ஒன்று. பண்டிகைகள், திருவிழாக்களும் மிகப் பழமையான பாரம்பரியம் என்பதோடு மட்டுமல்லாமல்,  மக்களனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கக் கூடிய பேராற்றல் வாய்ந்தவை. இதுநாள் வரையிலும் நமது பாரத தேசத்தில் மக்களிடையே ஒற்றுமையை கட்டிக் காத்து வருவதும் இது போன்ற பாரம்பரியம் கொண்ட நிகழ்வுகளே.

பாரம்பரியமும் கலாசாரமும் பாதிப்புற்றால் ஒரு தேசம் தன் உயிர்சக்தியை இழந்துவிடும். இது தெரிந்தே தேசவிரோத சக்திகள் நம்மிடையே ஊடுருவியுள்ள மேற்கத்திய சிந்தனையைக் கொண்டு நமது கண்களை நம் கைகளைக் கொண்டே குத்தும் வகையில் பாரம்பரிய செயல்பாடுகளில் தலையிட்டு அவற்றைத் தகர்க்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட எழுச்சி,  மற்ற பாரம்பரியங்களையும் கட்டிக் காப்பதில் தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த இதழில் நமது பாரம்பரிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரைத் திருநாள்தான் என்பதனை ஆதாரத்துடன் நிறுவும் கட்டுரையை ஆய்வாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அளித்துள்ளார். திரு.பத்மன் அவர்களது கட்டுரையும் தமிழ் இலக்கியங்களில் தேசம் முழுவதும் உள்ள வேள்விகள் போன்ற செயல்கள் தமிழகத்திலும் இருந்ததை சங்கப் பாடல்களின் மூலம் நிறுவுகிறார்.

பஞ்சபூதங்களைக் கடவுளாய்க் காண்பதும் நதிகளைப் போற்றுவதும் நமது பாரம்பரியமே. நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாத்து வருவதும், உருவாக்குவதும் நமது முக்கியக் கடமையாய் இருந்து வந்துள்ளது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து நாம் தவறி, ஏதோ அது அரசாங்கத்தின் வேலையாய் ஒதுக்கியதால் தான் இன்று வறட்சியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையை எட்டியிருக்கிறோம்.

2 டி.எம்.சி நீருக்கு அண்டை மாநிலத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நாம் மிக அதிக அளவில் கிடைக்கும் மழைப்பொழிவை சேமிக்கத் தவறுகிறோம். இனியாவது இழிநிலை மாற நமது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து விரைந்து செயல்படுவோம்.

முதுபெரும் தமிழ் எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அண்மையில் காலமானது தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கட்டுரை இவ்விதழில் வெளியாகியுள்ளது.

கட்டுரைகள், கவிதை, சிறுகதை எனப் பல விஷயங்களை இந்த இதழிலும் சிறப்பாகக் கொண்டுவர முயற்சித்திருக்கிறோம்.  உங்கள் கருத்துகளை எங்களுக்கு அனுப்பி இதழ் மேலும் சிறப்படைய, எங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறோம்.

 

 அன்புடன்,

சு.நாராயணன்.

குறிப்பு:

 

திரு. சு.நாராயணன், ‘காண்டீபம்’ இதழின் ஆசிரியர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in சித்திரை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s