2.6 கர்நாடக இசையின் தந்தை

-முத்துவிஜயன்

புரந்தரதாசர்

புரந்தரதாசர்

புரந்தரதாசர்

திருநட்சத்திரம்: தை- உத்திரம் (17.01.2016)

பாரம்பரியமான கர்நாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுபவர் புரந்தரதாசர் (1484 – 1564) . இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார்.   ‘மாயாமாளவகௌளை’ என்னும் ராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.

புரந்தரதாசர் 1484- ஆம் ஆண்டு (கர்நாடக மாநிலம்) புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில், பிரபல செல்வந்தரான வரதப்ப நாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக்.

இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும், பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் பண்டரிநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் ‘புரந்தர விட்டலர்’ எனும் பெயரும் பெற்றார். தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்த புரந்தரர்,  தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

தன் தந்தையின் ரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி ‘நவகோடி நாராயணன்’ என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும்.

ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். அதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்த யாத்திரை செய்தார். வயிற்று வலி நீங்கியது. தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525-ஆம் ஆண்டு விஜயராஜ சுவாமிகள், சத்திய தர்மதீர்த்த சுவாமிகள் ஆகியோரின் அருள் பெற்று  ‘புரந்தரதாசர்’ எனும் பெயர் பெற்றார். இவர் சங்கீத பிதாமகர், ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர் 475,000 கீர்த்தனைகளை செய்துள்ளதாக  ‘வாசுதேவ நாமாவளி’ என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளன. இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை  ‘தாசர்வாள் பதங்கள்’ என்றும்  ‘தேவர் நாமாக்கள்’ என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவரது முத்திரை  ‘புரந்தரவிட்டல’ என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவரது கீர்த்தனைகளில்  வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.

தனது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து, 1564 -ஆம் ஆண்டு தை மாதம் இரண்டாம் தேதி அமாவாசையன்று இப்பூவுலகை நீத்தார்.

 

.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s