2.25 தமிழ்த்தாத்தா பஞ்சகம்

-கவிஞர் குழலேந்தி

u-ve-sa

உ.வே.சாமிநாதய்யர்

தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
எங்கள் தமிழ்த்தாத்தா தான். 1

ஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு
பாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை
பாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட
தூதர் தமிழ்த்தாத்தா தான். 2

தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
அமிழ்தான நூல்களினை அரித்தொழித்துத் தின்றுவந்த
சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
வாழ்வே தமிழ்த்தாத்தா தான். 3

வாய்ச்சொல்லில் வீரரென வாழ்ந்தோரின் மத்தியிலே
ஆய்ச்சியர் குரவையும் அணித்தமிழ் இலக்கணமும்
பரவும் தமிழிசையின் பெருமிதத்தை ஊட்டியநல்
குருவே தமிழ்த்தாத்தா தான். 4

ஆரணங்காம் தமிழ்த்தாயின் ஆபரண மானபெரும்
பூரணத்தின் மணித்திரளாம் புத்திளமை பூத்திருக்கும்
மங்காத இலக்கியங்கள் மாயாமல் காத்தவரே
எங்கள் தமிழ்த்தாத்தா தான். 5

 

குறிப்பு:

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் திரு. உ.வே.சாமிநாதய்யர்  (1855, பிப். 19- 1942,  ஏப்ரல் 28) தமிழ் உரைநடையில் புத்தெழுச்சி உருவாக்கியவர்; சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் பலவற்றை அழியாமல் காத்தவர்.

கவிஞர் திரு. குழலேந்தி, தே.சி.க. மாநில பொதுச் செயலாளர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s