2.21 எதிரொலிகள்…

-ஆசிரியர் குழு

ஐப்பசி-2016 இதழ்

ஐப்பசி-2016 இதழ்

காண்டீபம் அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!

சுவாமி சமாஹிதானந்தர்

ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,

சர்.பி.எஸ்.சிவசாமி சாலை,

மயிலாப்பூர், சென்னை- 600 004

இறைவனின் திருவருளைப் பெற்ற தேசிய சிந்தனைக் கழக அன்பர்களுக்கு,

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகிய திருமூவர்களின் அருளாசிகளை பிரார்த்தித்து எழுதிக் கொள்வது.

வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையோடு வெளியிட்ட காண்டீபம் – தேசிய விழிப்புணர்வு இதழ் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இதழ் முழுவதும் மிகவும் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நல்லதை நாடும் அன்பர்களுக்கு மத்தியில் நமது இதழ் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

இதழின் வடிவமைப்பு அதிநவீனத்துடன், அருமையான வடிவுடைய எழுத்துக்களுடன், நல்ல ரசனையுடனும் தரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. வடிமைத்த அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

நமது இதழில் இடம் பெற்ற தமிழ் கட்டுரைகள், கவிதைகள், ஆங்கிலக் கட்டுரைகள் ஆகிய அனைத்தும் உயர்ந்த கருத்துக்ளைக் கொண்டதாக,  நல்ல தமிழில், தற்போதைய வாசகர்கள் படிக்கும்படியான மொழிநடையுடன் எழுதப்பட்டுள்ளன.

நம் நாட்டில் உதித்த ஆன்றோர்கள்,  சான்றோர்கள் ஆகிய பெருமக்களின் புனித நினைவுகள் குறித்த நாட்களின் தொகுப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நமது இயக்கம் சார்ந்த பள்ளி கல்லூரிகளில் மாணவச் செல்வங்களின் கவனத்திற்காக இவற்றை பலகையில் எழுதி வைக்க உதவும்.

எல்லா வகையிலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களைக் கொண்டதாக நமது இதழ் விளங்குகிறது. நன்னெறிகளையும், நற்பண்புகளையும் தமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மகாபுருஷர்ளைப் பற்றிய செய்திகள் – எதிர்கால நம் தலைமுறையைக் கருத்தில் வைத்து மிகுந்த பொறுப்புணர்வுடன் இதழில் கொடுக்கப்பட்டுள்ளன.

இறைவன் அருளால் நிறைய சந்தாதாரர்கள் இணைந்து, நமது இந்த நல்ல கருத்துக்கள் நாடெங்கும் பரவி சான்றோர் நிறைந்த நாடாக நமது பாரதநாடு விளங்க வேண்டும் என்று இந்த சமயத்தில் மனமாரப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

சிந்தனையில் மேம்பட்ட சான்றோர்களை அதிக அளவில் கொண்டதாக நமது சமுதாயம் விரைவில் மேம்படும் – என்ற நம்பிக்கை நம்முள் எப்போதும் இருந்து கொண்டிருக்கட்டும்.

பி.கு: தனது காண்டீபத்தின் டங்கார ஒலியால் எதிரிகளை கலக்கமுற்று ஓடச் செய்த அர்ஜுனனைப் போல, தமது வேதாந்த ஒலியால் நமது நாட்டில் இருந்த அறியாமை அசுரர்களை வெகுண்டு ஓடச் செய்த நமது வேதாந்த சிம்மம் விவேகானந்தரின் திருவுருவப் படம் இதழின் அட்டை அலங்கரித்திருந்தால், இன்னும் சற்று கூடுதலான பெருமையும் சிறப்பையும் நமது இதழ் பெற்றிருக்கும் என்பது அடியேனுடைய தாழ்மையான எண்ணம்.

இறைவன் தொண்டில்

சுவாமி சமாஹிதானந்தர்

 *** 

தேசிய சிந்தனையாளர்களுக்கு அமுது

 

ஆசிரியருக்கு வணக்கங்கள்.

தங்களது காண்டீபம் காலாண்டிதழை வாசித்தேன்.  அல்ல.. அல்ல…ரசித்தேன். ‘தேசியமும்,  தெய்வ பக்தியும் இணையற்ற பாரதத்தின் இரு கண்கள்” என்பார் சுவாமி விவேகானந்தர். அச்சு, அசலாக அந்த உணர்வுகளின் பிரவாகம் பொங்கி வழிகிறது இதழில்..

 ‘பாரத ரத்னா மதன்மோகன் மாளவியா’ பற்றிய கட்டுரை எளிமையாக,  சுவையாக இருந்தது. பத்மனின்  ‘இருக்கு ஆனா இல்லை’,  இறை சிந்தனையாளர்களுக்கு விருந்து. பேரா.குமாரசாமியின் ‘தேசிய கல்விக் கொள்கையின் அவசியம்’,  இன்றைய கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களை தெளிவாக விளக்கியது. ‘கவிஞரின் அறம்’,  கவியரசு கண்ணதாசனின் எழுத்தாளுமைக்கான காரணத்தை , எழுத்துக் கதிரோனாய் அவன் உலா வந்த அழகைப்  படம் பிடித்துக் காட்டியது..  ‘கொள்ளை கொள்ளும் பாக்கள் தந்த மன்னன்’  திருமங்கை ஆழ்வாரையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. மொத்தத்தில் இந்த இதழ் எம்மைப் போன்ற தேசிய சிந்தனையாளர்களுக்கு அமுது படைத்தது உண்மையிலும் உண்மை..

இன்றைய  வேகமான விஞ்ஞான காலகட்டத்தில்,  தீக்குள் வீழ்கிற ஈக்களாய்,  திக்குத் தெரியாமல் தடுமாறும் இளைய சமுதாயத்திற்கு மெய்ஞ்ஞானத்தின் மேன்மையைச் சொல்லி ,  இலக்குகளை நோக்கி இளைஞர்கள் தடம் பதித்து வாழ்ந்திட,  ‘காண்டீபம்’ நிச்சயம் துணை செய்யும்.. என நம்புகிறேன். தங்களது தேசப்பணி வாழ்க, வளர்க, வெல்க!

-முருகானந்தன்
திருப்பூர்.
96292 93292 

.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s