2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன்

kandeepm-logo-colour

 

அன்பிற்கினிய வாசகர்களுக்கு,

நமஸ்காரம்!

முதற்கண் நமது முதல் இதழ் விஜயதசமியன்று வெளிவர உதவிய, வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பெருந்தகைகள், ஆசியுரை அருளிய பெருமக்கள், இதழைp பெற்று ரசித்து வாழ்த்துக் கூறிய வாசக நெஞ்சங்கள், விளம்பரம் தந்து ஆதரவுக்கரம் நீட்டிய உள்ளிட்ட அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை  ‘காண்டீபம்’ ஆசிரியர் குழு மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மழை பொழிகிறது; சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு வேதனை. இதில் மகிழ்ச்சி அடைவோருக்கு மட்டுமே அது பலனை நல்குவது இல்லை. அதன் கடமை இங்கு பொழிந்து இயற்கையின் கடமையை ஆற்றி அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் பலனை நல்கி விடுகிறது. அது போலவே அரசாட்சி என்பதும் அவர்களின் செயல்கள் மக்கள் அனைவருக்கும் நலன் பயக்கும் வகையில் அமைவது சிறப்பு. அவ்வாறு இன்றைய பணமதிப்பு இழப்பு என்ற அரசின் முடிவு மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அலசப் புகுகிறது இந்த இதழின் அட்டைப்படக் கட்டுரை.

பாரம்பரியம் என்பது நமது முன்னோர் வாழ்ந்த சிறந்த வாழ்வின் நீட்சி. அதனைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை.. ஜல்லிக்கட்டும் அவ்வகையில் நாம் பாதுகாக்க வேண்டிய ஒன்று. அதனை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மத்திய, மாநில அரசுகள் நடத்திட முழு முயற்சி எடுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. நமது வேண்டுகோளும் கூட.

இந்த தை மாத இதழ், பலவிதக் கட்டுரைகள், கவிதைகள் என அற்புதமாக வந்துள்ளது. அனைவரும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்தப் பத்திரிக்கையை உங்கள் அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கி தேசிய உணர்வு பல்கிப் பெருக ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

”தை பிறந்தால் வழிபிறக்கும்” என்பர். நமது விவசாயப் பெருமக்களுக்கு நல்வழி கிடைத்து விவசாயம் செழிக்க ஒன்றிணைந்து இறையைப் பிரார்த்திப்போம். பணம் இருந்தால் உணவு கிடைக்கும் என்ற எண்ணம் இன்று மிகுந்திருக்கிறது. அதை நீக்கி விவசாயத்தின் மகத்துவத்தை நம் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கவும், நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு நல்கவும் உறுதி ஏற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவருக்கும் ‘காண்டீபம்’ குழுவின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!  மீண்டும் தமிழர் புத்தாண்டாம் சித்திரைத் திருநாளில் சந்திப்போம்!

வந்தே மாதரம்!

 அன்புடன்,

சு.நாராயணன்.

குறிப்பு:

திரு. சு.நாராயணன், ‘காண்டீபம்’ இதழின் ஆசிரியர்.

.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s