2.12 புரட்சியின் தளகர்த்தர்கள்

-ஆசிரியர் குழு

bagathsingh-rajaguru-suhadev

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு

(பலிதானம்: மார்ச் 23, 1931)

”கவர்னர் அவர்களே,  பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக நாங்கள் யுத்தம் தொடுத்தோம் என்று குற்றம் சாட்டி எங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், யுத்தக் கைதிகளான எங்களை ராணுவ முறைப்படி போர்வீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்வதுதானே நியாயம்?  தூக்கிலிட்டுக் கொல்வது நியாயமற்றது.

  ஆகவே ராணுவ வீரர்களை அனுப்பி எங்களை சுட்டுக் கொல்வதற்கு  ஏற்பாடு  செய்யுங்கள்”.

– தங்கள் பகத்சிங்

(1931, மார்ச் 3)

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் மரணத்திற்குக் காரணமான ஆங்கிலேய அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்றது தொடர்பான இரண்டாவது லாகூர் சதி வழக்கிலும்,  டில்லி சட்டசபையில் குண்டுவீசி பிரிட்டீஷ் அரசைக் கவிழ்க்க முயன்ற  வழக்கிலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய புரட்சி நாயகர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர், ஆங்கில  அதிகாரிக்கு    தியாகி பகத்சிங் எழுதிய கடிதம் இது.

(ஆதாரம்: சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

– பக்: 310 ;   சிவலை இளமதி

அலைகள் வெளியீட்டகம், சென்னை).

சாகும் தறுவாயிலும் என்னே துணிவு? இதுவல்லவா பராக்கிரமம்? ஆயினும், இவரது வேண்டுகோள் ஏற்கப்படாமல்,   தூக்கிலிடப்பட்டனர்  மூவரும்  (1931, மார்ச் 23).

இத்தகைய தியாகியரால் அல்லவா நாம் சுதந்திரம் பெற்றுள்ளோம்! இன்று அவர்களது நினைவுநாளில், நமது தேசத்தின் தற்போதைய இழிநிலை குறித்து சற்றேனும் சிந்திப்போம்!

 

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s