2.2 பொங்கலோ பொங்கல்!

-பொன்.பாண்டியன்

pongal-pic

கண்ணுக்குத் தெரிகின்ற கடவுளைத் தொழுதிடவே

வண்ணப் பொடிகளிலே வாசலிலே கோலமிட்டு

கன்னலை, கதலியை, கவினுறும் மாவிலையை

தென்னை இளங்கீற்றை, திரளான கமுகுதனை,

மங்கல மஞ்சளையும் மணித் தோரணமாய்க் கட்டி,

குங்குமப் பொட்டிட்டு குலவிளக்கும் ஏற்றி வைத்து,

பிழம்பொளிரும் அடுப்பினிலே புத்தரிசி தன்னுடனே

அழகுபுனை பானையிலே நல்லாவின் பால் கலந்து,

புத்துருக்கி நெய்யினிலே உலர்திராட்சை வாதுமையும்

முத்துநிகர் முந்திரியும் மொறுமொறுவாய் வறுத்திட்டு,

நுரைதிரளப் பொங்கலது பொங்கிவரப் பொங்கிவர,

கரமிரண்டும் சிரம்குவித்து உளம் மகிழ விழிகுளிர

“சூரியனே, சோழியனே, அருந்தமிழாம் ஆரியனே!

வீரியனே, வித்தகனே, விண்வெளியின் நாதமென”

நாமம் பலபரவி நாமெல்லாம் ஒன்றிணைந்து

நாமகிழ முழங்கிடுவோம்- பொங்கலோ பொங்கலென!

கன்று காலி காளையொடு காமதேனு ஆவினையும்

ஒன்றுகூடி வணங்கிடுவோம்- பொங்கலோ பொங்கலென!

என்றும் உலகாளும் உழவர்  அடி  தொழுது

நன்றி நவின்றிடுவோம் பொங்கலோ பொங்கலென!

மகரத் திங்களில் அதிகாலை தைந்நீராடி

பாரத மாமகள் வாழ்கவென வாழ்த்திடுவோம்!

நிகரில்லா நல்வல்லரசாய் நம்நாடு உயர்ந்திடவே

வணங்கி முழங்கிடுவோம்- பொங்கலோ பொங்கலென!

 

 

குறிப்பு:

pon-pandianதிரு.பொன்.பாண்டியன், தே.சி.க. மாநிலச் செயலாளர்களுள் ஒருவர்; குடியாத்தத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in தை-2017 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s