1.8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை

இரா.வன்னியராஜன்

பேரா. இரா.வன்னியராஜன்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

டாக்டர் இரா.வன்னியராஜன்

தென்பாரதத் தலைவர்,  ஆர்.எஸ்.எஸ்.

                25.09.2016

 

தேசிய சிந்தனைக் கழகம் சுவாமி விவாகானந்தரின் சிந்தனைக்கு செயல்வடிவு கொடுக்கும் சிந்தனை அமைப்புகளுள் தமிழகத்தில் தலையாதது; பாரத தேசத்தை தெய்வமாகப் போற்றும் இளைய சமுதாயத்தை நிர்மாணிக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பு.

நம் நாட்டில் இளைய சமுதாயத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும்போது “நம் இளைஞர்கள் நன்கு பணி புரிகின்றனர். இன்னும் சிறப்பாக நாட்டிற்கு பணி புரிய முடியும்” என்கிறார்.

தேசப்பற்று கொண்டு முன்னுதாரணமாகப் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் பேரூக்கத்தையும் வளர்க்க முடியும். முன்னுதாரணமான ஆசிரியர்களையும், சிந்தனையாளர்களையும் இணைத்து பணிபுரியும் அமைப்பு தேசிய சிந்தனைக் கழகம்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மூலம்  ‘காண்டீபம்’ பெயர் தாங்கிய காலாண்டிதழ் இந்த ஆண்டு விஜயதசமி வெற்றித் திருநாளில் துவங்கி வெளியிடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஸ்ரீமத் பகவத்கீதையின் இறுதிப்பாடல் சஞ்சயன் கூறியது ஆகும்: “எங்கு காண்டீப வில் ஏந்திய பார்த்தனுடைய பராக்கிரமும், யோகேஷ்வரனாகிய ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரகமும் இணைகிறதோ அங்கு செல்வப் பெருக்கும், வெற்றியும் நிலைத்த நீதியும் இருக்கும்” என்பது அப்பாடலின் பொருள்.

“யத்ர யோகேஷ்வர க்ருஷ்ணா யத்ரபார்த்தோ தனுர்தர:

தத்ர ஸ்ரீவிஜயோ பூதி த்ருவா நீதி மதிர்மம:”

       – இவை கீதையின் வரிகள். மனிதமுயற்சியும்,  இறை அருளும் இணைய வேண்டும் என்பது தான் சாரம்.

தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினருக்கு தேசிய எண்ணத்தை மேலோங்கச் செய்து, பாரத அன்னையை மீண்டும் ரத்ன சிம்மாசனத்தில் ராஜராஜேஸ்வரியாக உலக அரங்கில் வீற்றிருக்கச் செய்யும் முயற்சிகளில், அவர்கள் முனைப்புடன் ஆக்கபூர்வமாக செயல்பட உணர்வூட்டும் படைப்புகளை ஏந்தி  ‘காண்டீபம்’ காலாண்டு இதழ் வெளி வருகிறது.

இறையருளும், நல்லோரின் ஒத்துழைப்பும் கனிந்து வரும் மகிழ்ச்சியான இக்கால கட்டத்தில் காண்டீபம் ஆசிரியர் குழு, படைப்பாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஆனந்தமான  ‘விஜயதசமி’ வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.

                                                                அன்புடன்

இரா.வன்னியராஜன்

121  க. ராமசாமித் தெரு,

விருதுநகர் – 626 001

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s