1.7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை

ராம.கோபாலன்

இராம.கோபாலன்

இந்து முன்னணி, தமிழ்நாடு

 

இராம.கோபாலன்

நிறுவன அமைப்பாளர்,

இந்து முன்னணி.

தமிழகம் நாத்திகவாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்தபோது, ஆரிய- திராவிட வாதம் என்ற கற்பனையான பிளவை முன்னிறுத்தி சுயநல அரசியல்வாதிகள் தேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுத்த காலத்தில், 1970-களில், தேசிய சிந்தனை கொண்ட நல்லுள்ளங்கள் பலர் பதைபதைத்தனர். அவர்களின் ஆர்வத்தால் உந்தப்பட்டு, தமிழகத்தில் அப்போது உருவானதுதான் தேசிய சிந்தனைக் கழகம்.

திருச்சியைச் சார்ந்த பேராசிரியர் ராதாகிருஷ்ணன், தியாகபூமி ஆசிரியர் சாது வே.ரங்கராஜன் உள்ளிட்டோருடன் நானும் இணைந்து தேசிய சிந்தனைக் கழகத்தில் இயங்கினேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக அமைப்பாளராக நான் பணிபுரிந்த காலம் அது.

காலப்போக்கில், எதிர்பாராத காரணங்களால் தேசிய சிந்தனைக் கழகத்தின் இயக்கப் பணிகள் பாதியில் நின்றன. ஆயினும், மண்ணில் கண்ணுக்குத் தெரியாமல் வேரோடியிருக்கும் அருகு சிறு மழை பொழிந்ததும் துளிர்விடுவது போல, 2007-இல் மீண்டும் தேசிய சிந்தனைக் கழகம் உயிர்த்தெழுந்தது. ஏனெனில், இது ஓர் இறைபணி. வாழையடி வாழையாக இம்மண்ணில் உதித்து பாரதப் பண்பாட்டுக்கு வளம் சேர்த்த தமிழ் அறிஞர்களின் இடையறாத தொடர்ச்சியாக, தேசிய சிந்தனையைப் பரப்பும் இந்த அமைப்பில் இன்றும் பலர் ஈடுபடுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தற்போது, தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் ‘காண்டீபம்’ என்ற பெயரில் காலாண்டிதழ் தயாராவதும், வெற்றித் திருநாளாம் விஜயதசமியில் அதன் முதல் இதழ் வெளியாவதும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகும். இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தர்மம் இருக்கும் இடத்தில் காண்டீபம் இருக்கும். தர்மமே என்றும் வெல்லும்!

என்றும் தேசிய தெய்வீகப் பணியில்,

இராம.கோபாலன்

சென்னை,

02.10.2016

 

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s