1.25. நமக்கெலாம் காப்பு!

-கவிஞர் குழலேந்தி

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர்

(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)

*

திருப்பெரும்புதூரில் அவதரித்த

திருமாலின் இளையவன்.

திருக்கச்சியுறை வரதராசனின்

ஆணைவழி நடந்த அடியவன்.

திருவரங்கம் கோயில் புதுமை செய்த

கைங்கர்ய வல்லுநன்.

திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

திண்மை மிக்க மன்னவன். 1

.

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

சாதனை செய்த புரட்சியாளன்.

திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

தெய்வம் அருளிய தமிழ் முனி.

வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

 .

உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

மாய இருளை நீக்கும் கதிரோன்

அனைவருக்கும் பொது உடைமையென

திண்ணமாய் உரைத்த மனிதன்.

திருக்குலத்தோரை அரவணைத்து

சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

 .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

திருக்கோயில்கள் திறம்பட இயங்க

வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

அகங்காரம் என்னும் மாயப்பேயை

தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

 .

இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

துறவு பூண்ட தூயவன்.

இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

இயக்கம் வளர்த்த மாயவன்.

விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

விளக்க வந்த வேதியன்.

ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

திருவருள் பெற்ற சோதியன். 5

 .

திருவாய்மொழியைப் பரவலாக்கிய

நம்மாழ்வாரின் ஓதுவன்.

பாவை பாடிய கோதையின் ஆசையை

நிறைவேற்றிய சோதரன்.

அருகில் வருவோர் அனைவரும் உயர

நல்வழி காட்டும் சாதகன்.

சரணாகதியை முதன்மைப்படுத்தி

துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

 .

பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

குருவை விஞ்சிய சிஷ்யன்.

குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

அரிதினும் அரிய அவதார புருஷன்.

ஆளவந்தாரின் ஆசைகளை

பூர்த்தி செய்த புன்ணியன்.

ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

 .

அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

வைணவம் திருப்புமுனை கண்டது.

இறைவனை அடையும் ரகசிய வழியை

உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

குருநாதர் சொல்லை மீறி அவன்

எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

 .

தானொருவன் நரகம் புக்கினும்

மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

தன்னை அளித்த தயாபரனை

அப்போது உலகம் கண்டது.

எம்பெருமானாரின் கருணை மழை

எல்லோரையும் நனைத்தது.

சௌமிய நாராயணர் திருத்தலம்

ராமானுஜனால் பேறு பெற்றது! 9

 .

ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

 

.

குறிப்பு:

கவிஞர் குழலேந்தி தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர்.

 

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s