1.19. வைஷ்ணவன் என்போன் யார்?

-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை  

ram-and-hanuman

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேட்பீரே!

(வைஷ்ணவன்)


சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல் மனம் சொல் இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.

(வைஷ்ணவன்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்,
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன்; தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோதும் அவன்
ஊரார் உடைமையைத் தொட மாட்டான்.
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.

(வைஷ்ணவன்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்;
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம்.

(வைஷ்ணவன்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார்.

(வைஷ்ணவன்)

 

 

குறிப்பு:

namakkal-kavignar“வைஷ்ணவ ஜனதோ, தேணே கஹியே, ஜே பீர பாராயீ ஜாணேரே”  – என்ற நர்ஸீ மேத்தா பாடல், மகாத்மா காந்தியின் மனம் கவர்ந்த பாடல். அந்தப் பாடலை, தமிழாக்கி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை ( அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) அவர்கள் அளித்த பாடலே இது.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s