1.17. குறும்புப் பிள்ளை

-ஸ்ரீ.பக்தவத்சலம்

A red kite flying against a blue sky.

 

குறும்பும் செல்லமுமாய்

இருக்கிறது ஒரு பிள்ளை.

.

அடித்துக் கதவை சாத்த்விட்டு

ஆங்காங்கே குப்பை கொட்டுவான்.

என்னடா வேலையிது வென்றால்

பட்டம் பறக்க விட்டுக் காட்டுவான்.

.

கொத்துக் கொத்தாய்ப் பூக்களை

பிய்த்துப் பிய்த்துப் போடுவான்.

ஏனடா இப்படியென்றால் மூக்கருகே

முகர்ந்துபார் நல்வாசமி தென்பான்.

.

விளக்கேற்றிக் கரம் குவிக்கையில்

விளக்கணைத்து விளையாடுவான்.

சாமி கண்ணைக் குத்துமென்றால்

உயிரே உனக்கு நாந்தானென்பான்.

.

அசந்திருக்கும் வேளை பார்த்து

ஆடை விலக்கி அழகு பார்ப்பான்.

அச்சச்சோ என்றலறினால்

எனக்கென்ன என்றோடுவான்.

விரும்பிச் சொன்னது கொஞ்சம்.

வெறுத்துவிட்டது மிஞ்சும்.

என்ன செய்ய………?

.

உயிருக்கு உத்திரமாய்

உடனிருக்கும் பிள்ளை

ஆடிப்புழுதி மேனி பூசி அடங்காமல்

ஐப்பசி அடைமழை வரை குளிக்காமல்

தெருத் தெருவாய் திரிந்தலைகிறான்

கட்டிப் போட முடியாத காற்றுப் பிள்ளை.

.

 

குறிப்பு:

திரு.  ஸ்ரீ.பக்தவத்சலம்,  தேசிய சிந்தனைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s