1.13. மகாத்மா காந்தி பஞ்சகம்

-மகாகவி பாரதி

gandhi

மகாத்மா காந்தி

 

வாழ்க நீ! எம்மான், இந்த
  வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
  விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
  பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
  மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
.

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்
  விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி
  ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
  படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய,
   புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!
.

(வேறு)

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
  மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
  என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
  வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
  படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!
.
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
  பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
  கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
  இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
  பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!
.
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
  அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
  அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை!
  நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
  வையகம் வாழ்கநல் லறத்தே!

.

 

குறிப்பு:

bharathiஇந்திய அரசியலில் மோகந்தாஸ் கரம்சந்த காந்தி நுழைந்த ஆரம்ப காலத்திலேயே அவரது தலைமையின் சிறப்பை உணர்ந்த மகாகவி பாரதி (டிச. 11, 1882- செப். 11, 1921), அவரை மகாத்மா என விளித்து எழுதிய பாடல் இது.

தேசிய சிந்தனையில் தமிழகம் என்றும் முதன்மை மிக்கது என்பதற்கான அற்புதமான சான்று இக்கவிதை.

Advertisements

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s