1.2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

-சு.நாராயணன்

kandeepm-logo-colour

அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

நமஸ்காரம்!

பரித்ராணாய ஸ்தூனாம் விநாசாய துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே

-இது கண்ணன் வாக்கு. ஒவ்வொரு முறை தர்மத்தை நிலைநாட்ட அவன் அவதரிக்கும்பொழுதும், முன்னரும் பின்னருமாக பல கருவிகளும் அவனுக்கு உதவியாகப் படைக்கப்பட்டிருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அதர்மத்தின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கும். ஒருவருக்கு தர்மமாய் தோன்றுவது மற்றவருக்கு அதர்மமாய் இருக்கலாம். ஆனால் பொதுவாக அனைவருக்கும் நலம் தரக்கூடிய ஒன்றே தர்மமாய் இருக்கும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாக்கினின்றும் மாறி, பரந்து விரிந்த தேசிய எண்ணத்தினின்றும் திரிந்து, இனம், மதம், மொழி என்று குறுகிய சிந்தனையே இன்றைய காலகட்டத்தில் அதர்மமாய் வடிவம் கொண்டு நிற்கிறது. அது பயங்கரவாதமாக மாறி மக்களை இன்னலுக்கு ஆட்படுத்துகிறது.

விஜயன் கையில் காண்டீபம் ஒரு கருவி என்றால், கண்ணனுக்கு விஜயன் கருவி. இப்படி தர்மத்திற்கான கருவிகள், அதர்மம் வலுப்பெறும் ஒவ்வொரு சமயத்திலும் படைக்கப்படும். இக் காலகட்டத்தில் இருக்கும் அதர்மத்தை எதிர்க்க தேசிய சிந்தனை என்ற கருவியினை நல்லுள்ளம் கொண்டோர் கையிலெடுத்துள்ளனர். விஜயன் கையில் காண்டீபம் போல, தேசிய சிந்தனை கொண்ட பாரதர்க்கு ‘காண்டீபம்’ என்ற இந்த இதழ் கருவியாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

வெற்றித் திருநாளாம் விஜயதசமியில் காலாண்டிதழாக மலரும் இவ்விதழ்,  முப்பெருந்தேவியரின் ஆசிகளோடு விரைவில் மாத இதழாக மலர வேண்டும் என்பது நமது விருப்பம். அத்துணை விருப்பமும் தேசபக்தி கொண்ட வாசகர்களாகிய உங்கள் நல் ஒத்துழைப்போடு நிறைவேறும் என்று நம்புகின்றோம்.

மலரும் இதழில் மணமும் குணமும் கண்டுணர்ந்து, உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து, மேலும் இச்செயல் நன்கு சிறப்புற நடந்தேற ஒத்துழைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

வந்தே மாதரம்.

அன்புடன்,

சு.நாராயணன்

குறிப்பு:

திரு. சு.நாராயணன், ‘காண்டீபம்’ இதழின் ஆசிரியர்.

About காண்டீபம்

தமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....
This entry was posted in ஐப்பசி-2016 and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s