பொருள்புதிது இணையதளம்: ஒரு வேண்டுகோள்

தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய அணியாக, பொருள் புதிது.காம் என்ற இணையதளம் வெளியாகி வருகிறது. நமது தோழமைத் தளமான இத்தளம் குறித்த அறிவிப்பு இது...

நல்ல நூல்கள் சமுதாயத்தின் திசைகாட்டிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பஞ்சிலிருந்து நூல் நூற்று அதனைக் கொண்டு தனது இடையறா உழைப்பால் துணியை நெசவு செய்யும் தொழிலாளி போல, தமது  எண்ணங்களை எழுத்தாக்கி சமுதாயத்துக்கான அணியாக, நூலாக நெசவு செய்பவர்கள் எழுத்தாளர்கள்.  

எழுத்தாளர்களின் படைப்புகள் அச்சு வாகனம் ஏறும்போதுதான் அவை தேவையானோருக்குப் பயன்படும் சாதனமாக அமைய முடியும்.அப்போதுதான் அவை காலம் கடந்த ஆவணமாகும். அதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் அமைவதில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கானது எமது பதிப்பக முயற்சி.

இன்று மகாகவி பாரதி உலக அளவில் தமிழ் மொழியின் அடையாளமாகவே மாறி இருக்கிறார். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எழுத்துகள் அதற்குரிய முழுமையான மதிப்பைப் பெற்றதில்லை. இன்றும்கூட அவரது எழுத்துத் திறனின் பூரணத்தை தமிழகம் உணர்ந்துள்ளதா என்பது சந்தேகமே. அதுபோலவே, தகுதியற்ற பலர் வேறு காரணிகளால் எழுத்தாளராகப் பிராபல்யம் அடைவதும், திறமையுள்ள நூல் வல்லவர்கள் மறைந்து கிடப்பதும் இம்மண்ணில் தொடர்ந்து நிகழ்கிறது.

இதன் காரணமாக, நமது நூலக அடுக்குகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளிடையே நல்ல நூல்களை அணுகுவதே சவாலான செயலாக மாறிவிட்ட அவலச் சூழலில் நாம் வாழ்கிறோம். வாசிப்பவர்கள் அருகிவரும் காலத்தில், தமக்குத் தாமே மேடை அமைத்து மெச்சிக் கொள்வோர் பெருகிவரும் வறட்டுச் சூழலில், நமது மொழிக்கு நலம் விளைக்கும் அருஞ்செயலை நிகழ்த்த வேண்டும் என்ற விருப்பமே ‘உலகெலாம்’  பதிப்பகமாக உதயமாகி இருக்கிறது.

சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சரிதத்தை பெரிய புராணமாக ஆக்கிட விரும்பி சிதம்பரம் கோயிலுறை ஈசனிடம் இறைவாக்குக் கேட்டபோது “உலகெலாம்” என்று இறைவனே முதலடியை எடுத்துக் கொடுத்தார். அந்த முதலடியையே எமது பதிப்பகத்தின் பெயராகக் கொள்கிறோம். 

எமது உலகெலாம் பதிப்பகத்துக்கு ஓர் இணைய முகவரியாக இந்த ‘பொருள் புதிது’ இணையதளம் செயல்படுகிறது. இதில் நாம் படிக்க வேண்டிய நூல்கள் கருவூலமாக சேமிக்கப்படுகின்றன. தவிர பாரதி இலக்கியத்தை முழுமையாகத் தொகுக்கும் பணியும் இங்கு நிகழும். இத்தளத்தில் வெளியாகும் தொடர்கள் பிற்பாடு நூல் வடிவம் பெறுகின்றன.

உங்கள் மதிப்பு மிகுந்த ஆலோசனைகளும் நல்லாதரவும் எமது பதிப்பகத்தையும் இணையதளத்தையும் செம்மைப்படுத்தும். தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் பல நூல்களை வெளியிட, அன்பர்களின் ஆதரவும் இறையருளும் துணை புரியட்டும்.

காண்க: பொருள்புதிது.காம்

Posted in பிற | Tagged , | Leave a comment

காண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்

-ஆசிரியர் குழு

தூணி-  2; அம்பு-1

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி-  2017 இதழ்

***

உள்ளடக்கம்

6.1 பயணீயம் (கவிதை)

6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5

6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)

6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!

6.6  ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!

6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.

6.8 வாரணமாயிரம் (கவிதை)

6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

6.10 வள்ளலார் (வண்ணப்படம்)

6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)

6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்

6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!

6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்

6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி

6.17 நேதாஜி (வண்ணப்படம்)

6.18 நேதாஜியின் வீர முழக்கம்

6.19 Poetess To Goddess: Andal

6.20 தேசமே தெய்வம் என்றவர்

.

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.1 பயணீயம் (கவிதை)

-ஸ்ரீ.பக்தவத்சலம்

 

பயணிகளின்

கனிவான கவனத்திற்கு…

தயாராக இருக்கவும்.

தலையில் பறவையிடும் எச்சமாய்,

கிளையில் வந்தமரும் பறவையாய்,

கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,

வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,

உங்களுக்கான தடத்தில்

உங்களுக்கான வண்டி

எப்போதும் வரலாம். Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5

-ம.வே.பசுபதி

எட்டுப் புலவர்கள் பாடிய பத்து இலக்கியங்களின் தொகுப்பு  பத்துப்பாட்டு எனப்படும். பத்துப்பாட்டு,  எட்டுத்தொகை இரண்டும் சேர்ந்தது பதிணென் மேற்கணக்கு நூல்கள் என்பர். இவையே சங்க இலக்கியங்கள்.

பத்துப்பாட்டு தொகுப்பின் முதற்பாடல், சங்கப்புலவராகிய நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. இது இத்தொகுப்புக்கு கடவுள் வாழ்த்தாகவும், பத்தில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்புடையது. Continue reading

Posted in தை-2018 | Tagged | 1 Comment

6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)

தர்ம வீரர்

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630, பிப்ரவரி 19)

 

 

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

-என்.டி.என்.பிரபு

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630, பிப். 19)

 தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின்  வாழ்க்கையாகும்.

பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும்  உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி. Continue reading

Posted in தை-2018 | Tagged | Leave a comment

6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்!

-நைத்ருவன்

கடந்த 2017 டிச. 31-இல் ராஜபாளையத்தில் தினமணி ஏற்பாடு செய்த நிகழ்வில் கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை, அதன் நோக்கத்திலிருந்து வழுவிவிட்டது. அடிப்படையில் நாத்திகரான வைரமுத்துவால் ஆண்டாளின் சிறப்பை உணர முடியவில்லை என்பதை அவரது உரை காட்டியது. அதைவிட, ஆண்டாளின் பிறப்பு குறித்து அவர் தெரிவித்த விஷம் தோய்ந்த கருத்துகள்- அவர் அறியாமல் சொன்னவை ஆயினும்- ஆன்மிக அன்பர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்திவிட்டன.

அதேபோல, அரங்கனுடன் ஆண்டாள் இரண்டறக் கலந்ததையும் அதுதொடர்பான அவரது தீஞ்சுவைப் பாசுரங்களையும் மனம்போன போக்கில், பாலியல் சிந்தனையுடன் விளக்கி மாபெரும் தவறிழைத்தார் வைரமுத்து. இதனை எந்த தணிக்கையுமின்றி மறுநாள் வெளியிட்டு தினமணி நாளிதழும் பெரும்பிழை செய்தது. இது தொடர்பாக, வைரமுத்துவும், தினமணியும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி, தமிழகம் முழுவதும் ஆன்மிக அன்பர்களும் ஆண்டாள் பக்தர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு அசைபோடுகிறார் எழுத்தாளர் திரு. நைத்ருவன்.

Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.6  ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்!

-இசைக்கவி ரமணன்

 

கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு.

இசைக்கவி ரமணன்

‘வைகறை மேகங்கள்’ காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே! அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.

ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து. அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.

அதை அச்சிட்ட  ‘தினமணி’ கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்…

Continue reading

Posted in தை-2018 | Tagged , | 1 Comment

6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.

-சுகி.சிவம்

 தமிழன்னை ஆண்டாளை கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதற்கு தமிழ்நாடெங்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஆன்மிகப் பெரியோர் பலரும் இதுவரை கானாத வகையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பிரபல மேடைச் சொற்பொழிவாளர் திரு. சுகி.சிவம் எழுதிய ‘அத்துமீறல் ஓர் அலசல்’  என்ற தலைப்பிட்ட கேள்விகளை இங்கு காண்போம்:

பரந்த வாசிப்பும், சிறந்த மொழித்திறனும்,  சொந்த சிந்தனைகளும்  உடைய மதிப்புறு மனிதர் கவிஞர் வைரமுத்து என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்தியதால், அவரிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது:

  1. இண்டியானா பல்கலைக்கழகத்தின் (?) ஆய்வு செய்தியைப் பதிவிடும்போது – அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்? இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுத வேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா? அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?

Continue reading

Posted in தை-2018 | Tagged , | Leave a comment

6.8 வாரணமாயிரம் (கவிதை)

-ஸ்ரீ ஆண்டாள்

வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 1

.

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான் 2

.

Continue reading

Posted in தை-2018 | Tagged , , | Leave a comment